Splash Down என்றால் என்ன? சுனிதா வில்லியம்ஸ் தரையிறங்க ஃப்ளோரிடா கடற்கரையை தேர்வு செய்தது ஏன்?
நியூயார்க்: நாசா விஞ்ஞானிகளான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்டோர் ஏன் ஃப்ளோரிடாவில் இருக்கும் பசிபிக் கடலில் தரையிறங்கினர் தெரியுமா? splash down என்றால் என்ன?
8 நாட்கள் பயணமாக சென்ற சுனிதாவும் வில்மோரும் சுமார் 9 மாதங்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு பூமிக்கு வந்தனர். போயிங் விண்கலம் எந்திர கோளாறால், இவர்களை அழைத்து வர டிராகன் எனும் குட்டி கேப்சூல் சென்றது.

இதில் பயணிக்க பிரத்யேக ஆடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சுனிதா உள்ளிட்ட 4 பேரும் அணிந்து கொண்டனர். அவர்களது ரத்த அழுத்தத்தை சென்சார் கருவிகள் சோதனை செய்தன. டிராகன் பூமிக்கு வர 4 நிலைகள் உள்ளன. ஒன்று டிராகன் தயாராகுதல், அடுத்த நிலை விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு டிராகன் பிரிதல், பிறகு புவியின் வட்ட பாதைக்கு வந்து உயரம் குறைத்தல், கடைசி நிலை தரையிறங்குதல்...
இந்த 4 நிலைகளில் ஒரு நிலையில் சொதப்பல் ஏற்பட்டாலும் விஞ்ஞானிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றே சொல்லலாம். இதனால்தான் சுனிதா உள்ளிட்டோர் பத்திரமாக பூமிக்கு திரும்ப பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும் சவாலே வளிமண்டலத்தில் வருவதற்கு முன்னர் வெப்பநிலை 1600 டிகிரி இருக்கும்.
அதை அவர்களது உடல் தாங்க வேண்டும். நம்மால் 40 டிகிரியே தாங்கவில்லை எனும் போது 40 மடங்கு அதிகமான வெப்பநிலையை தாங்க அவர்கள் பிரத்யேக ஆடை அணிந்திருக்கிறார்கள். மேலும் புவி ஈர்ப்பு விசை இருக்கும் பகுதிக்கு அவர்களது விண்கலம் வந்ததும் ஒரு வித பயங்கரமான அழுத்தம் ஏற்படும். அதையும் அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு தரையிறங்கும் போது உயரத்தை குறைத்து, டிராகன் விண்கலம் பாராசூட்டை விரிக்க வேண்டும். அது போல் காலை 3.20 மணிக்கு பாராசூட்டை டிராகன் விரித்தது. அப்போது விண்கலம் ப்ளோரிடா கடற்கரையில் விழுந்தது. இதற்கு பெயர்தான் Splash down என்கிறார்கள்.

Splash down என்றால் தண்ணீரில் தரையிறங்குதல் ஆகும். விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் இருந்து இறங்கும் போது தரையில் தரையிறங்கினால் அழுத்தம் காரணமாக விண்கலம் ஓங்கி தரையில் விழும் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம். இது பாதுகாப்பானதும் இல்லை! அதனால்தான் விண்வெளி வீரர்கள் இந்த Splash down லேண்டிங் விரும்புகிறார்கள்.
இதே நீர் நிலைகளில் தரையிறங்கும் போது விண்கலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும். பாராசூட்டில் இருந்து தண்ணீரில் இறங்கியதும் அந்த ஃபோர்ஸுக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும், அதுதான் Splash down என்கிறார்கள். பிறகு சில நிமிடங்கள் விண்கலம் தண்ணீரிலேயே மிதக்கும்.
அப்போது அங்கு தயாராக இருக்கும் அமெரிக்க கடற்படையினரும், நாசா விஞ்ஞானிகளும் அந்த விண்கலத்தின் கதவை திறந்து சுனிதாவை முதலில் மீட்டனர். இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் சிரித்தபடியே கையசைத்து தம்ஸ் அப் காட்டினார்.

அதே போல் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் ஆகியோரும் மீட்கப்பட்டனர். அவர்களை மற்ற விஞ்ஞானிகள் கைதட்டி வரவேற்றனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த கதவை உள்ளிருந்து திறக்க முடியாது. எனவே சரியாக மீட்பு படையினர் அங்கு காத்திருந்து அந்த விண்கலத்தின் கதவை திறந்தால் மட்டுமே அவர்களால் வெளியேற முடியும். இல்லாவிட்டால் ரிஸ்க்தான்.
புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் இருந்ததால் அவர்களது இதய துடிப்பு வேகமாக அடிக்கும். இதனால் அவர்கள் ஸ்ட்ரெச்சரில் உட்கார வைத்து அழைத்துச் சென்றனர். மேலும் புவி ஈர்ப்பு விசையில்லாத இடத்தில் நடக்காமல் இவர்கள் மிதந்தபடியே இருந்ததால் அவர்களால் நடக்கவும் முடியாது. அவர்களது உடல் பூமியில் வாழ்வதற்கான இயல்பு நிலையை அடைய அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications