90 நிமிடம் டிரம்ப்பை மிரள வைத்த கமலா.. விவாதத்தில் வென்றது யார்? அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமான கட்டமாக கருதப்படும், அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் நேற்று அமெரிக்காவில் நடந்தது. ஏபிசி சேனல் மூலம் இந்த விவாதம் 90 நிமிடம் நடந்தது. முன்னதாக அதிபர் பிடன் - முன்னாள் அதிபர் டிரம்ப் இடையே விவாதம் நடக்க.. அதில் பிடன் மோசமாக சொதப்பினார். அதன்பின் அதிபர் தேர்தலில் இருந்து பிடன் விலக துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்.. பிடன் போல கமலா ஹாரிஸை எளிதாக "bully" செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டுதான் விவாதத்திற்கு வந்தார். ஆனால் விவாதத்தில் நடந்தது அதற்கு எதிர்மாறான சம்பவம். பிடன் போல என்னை எளிதாக சீண்டிவிட முடியாது என்பதை தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ் பல இடங்களில் நிரூபித்துக்காட்டினார்.

90 நிமிடம் நடந்த இந்த விவாதத்தில் வெளிநாட்டு மக்களின் அமெரிக்க குடியேற்றம், கருக்கலைப்பு உரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. இரு வேட்பாளர்களும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை வளைப்பதை நோக்கமாகக் கொண்டு தீவிரமாக பேசினர்.
90 நிமிடம் நடந்த இந்த விவாதத்தில் யார் வெற்றிபெற்றது என்று பலருக்கும் கேள்வி எழலாம். அதற்கான விடையை.. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. விவாதத்தில் யாருடைய கை ஓங்கியது என்று அந்நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டு உள்ளன.
பெரும்பாலான ஊடகங்கள் கமலா ஹாரிஸ் சிறப்பாக பேசினார். அவர் பதற்றம் இன்றி இருந்தார். டிரம்ப் ஆக்ரோஷப்பட்டதை ஹாரிஸ் சிறப்பாக எதிர்கொண்டார். நம்பிக்கையாக பேசினார். பொய்யான விமர்சனங்களை கூட தன்மையாக எதிர்கொண்டார் என்று கருத்துக்களை வைத்துள்ளனர். வெளிநாட்டு மக்களின் அமெரிக்க குடியேற்றம் குறித்து பேசும்போது டிரம்ப் கை ஓங்கி இருந்தாலும் கூட டிரம்ப் மற்ற இடங்களில் கமலா ஹாரிஸிடம் அடங்கி போகும் சூழல் ஏற்பட்டது. பிடன் மீது ஆதிக்கம் செலுத்தியது போல கமலாவை டிரம்ப் கட்டுப்படுத்த முடியவில்லை, என்று ஊடகங்கள் கூறியுள்ளனர்.
Politico கருத்து: இந்த விவாதத்தின் வெற்றியாளர் கமலா ஹாரிஸ் என்று பிரபல ஊடகமான பொலிட்டிகோ தெளிவாக அறிவித்து உள்ளது. "ஹாரிஸ் விவாதத்தில் வெற்றி பெற்றார் - டிரம்ப் ஹாரிஸுக்கு நெருக்கமாக கூட வர முடியவில்லை." என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு உள்ளனர். டொனால்ட் டிரம்பிற்கு எதிரான கமலா செயல்பாடு சிறப்பாக இருந்தது. டிரம்ப்பை மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டு கமலா அவரை சமநிலையை இழக்கச் செய்தார், என்று பாராட்டி உள்ளனர்.
CNN : CNN இதேபோன்ற கருத்துக்களை கூறி உள்ளது. கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்பை 1 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு தூண்டிவிட்டார். டிரம்ப்பை சீண்டி அவரை பேச தூண்டி.. அவரின் வாயில் இருந்தே தவறான விஷயங்களை சொல்ல வைத்தார், என்று கூறியுள்ளனர்.
The Washington Post : வாஷிங்டன் போஸ்ட், ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையேயான விவாதத்தை பகுப்பாய்வு செய்து, "இந்த விவாதத்தின் போது குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஒரு கூர்மையான, அதிரடியான கருத்துக்களை கமலா கூறினார்" என்று பாராட்டி உள்ளனர். டிரம்ப்பால் நீண்ட நேரம் சமாளிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
The New York Times: தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கருத்தில், கமலா ஹாரி தெளிவாக பேசினார். ஆனால் டிரம்ப் கோபம் அடைந்து நிதானம் இழந்து பேசினார் என்று கூறியுள்ளனர்.
Fox News: Fox News வெளியிட்ட கருத்தில் இரண்டு தரப்பும் தீவிரமாக பேசியதால், யார் வெற்றி தோல்வி என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர்.
MSNBC : MSNBC உள்ளிட்ட ஊடகங்கள் கமலா ஹாரிஸ் இதில் வெற்றிபெற்றதாகவும்.. டிரம்ப் அவசரத்தில் தவறான பொய்யான தகவல்களை அளித்ததாகவும் விமர்சனங்களை வைத்துள்ளன.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications