நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஷ்யாவால் வந்த ஆபத்து! சீக்கிரம் ரெடியாகுங்க! கடைசியில் எலான் மஸ்க்கையே இப்படி சொல்ல வச்சிட்டாங்களே!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ரஷ்யா எண்ணெய் இறக்குமதி அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் கொடுத்த எச்சரிக்கை ஒன்று கவனம் பெறுகிறது.

Recommended Video

    ரஷ்யாவுக்கு அமெரிக்கா திடீர் செக்… எண்ணெய் இறக்குமதிக்கு தடை!

    உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை 100-110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 4 மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

    ஆனால் தற்போது ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..! ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..!

     பொருளாதார தடை

    பொருளாதார தடை

    பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட முடியவில்லை. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் கூட ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகம் நம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நாடுகளும் இந்த விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வேறு தற்போது ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு தடை விதித்துள்ளது.

    ரஷ்யா இறக்குமதி

    ரஷ்யா இறக்குமதி

    ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை வாங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் பிடன் அறிவித்துள்ளார். இந்த கச்சா எண்ணெய் விவகாரம் காரணமாகஅமெரிக்காவில் டீசல் விலை லிட்டருக்கு 4.9 டாலரை கடந்து உள்ளது. அதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 132 ரூபாயை கடந்துள்ளது. மொத்தத்தில் அமெரிக்கா ஆயில் இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகிறது.

    எலான் மஸ்க்

    எலான் மஸ்க்

    இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் எலான் மஸ்க் கொடுத்த எச்சரிக்கை ஒன்று அதிக கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் எண்ணெய் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க், சொல்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. நாம் இப்போதே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இப்போதே எல்லோரும் ரெடியாகுங்கள்.

    கஷ்டமான காலம்

    கஷ்டமான காலம்

    கஷ்டமான காலங்களில் கஷ்டமான முடிவுகளை எடுக்க வேண்டும். என்னுடைய டெஸ்லா நிறுவனத்திற்கு இது எதிராக இருக்கும். ஆனாலும் வேறு வழி இல்லை. மின் வாகனங்கள் போன்ற மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள், ஆற்றல்கள் உடனடியாக இந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யாது. ரஷ்யாவின் எண்ணெய் இழப்பை பூர்த்தி செய்ய மாற்று எரிபொருள் உடனடியாக கை கொடுக்க முடியாது.

     ஒரே வழி

    ஒரே வழி

    எண்ணெய் எடுப்பதே ஒரே வழி என்று மஸ்க் கூறியுள்ளார். அதாவது பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாற்று எரிபொருள் தீர்வு கிடையாது. அது எதிர்காலத்தில் நடக்கலாம். ஆனால் இப்போது பெட்ரோல், டீசல் எடுப்பதே சிறந்தது என்று மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லா போன்ற மின்னணு கார்களை உருவாக்கி, தொடர்ந்து மாற்று எரிபொருள் பற்றி குரல் கொடுத்து வரும் எலான் மஸ்க்கையே பெட்ரோல், டீசலுக்கு ஆதரவாக தற்காலிக சூழ்நிலை பேச வைத்துள்ளதுதான் இதன் விசித்திரமே.

    எரிபொருள் தேவை

    எரிபொருள் தேவை

    அதுமட்டுன்றி எரிபொருள் கேஸுக்கும் ரஷ்யாவை நம்பித்தான் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் பெரும்பாலான கேஸ் ரஷ்யாவில் இருந்துதான் வருகிறது. இந்த நிலையில் எண்ணெய் வர்த்தகத்திற்கு தடை விதித்தால் கேஸும் அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதனால் அமெரிக்காவில் விரைவில் கேஸ் தட்டுப்பாடும் ஏற்படும். இதை முன்னிட்டே கச்சா எண்ணெய், கேஸ் உற்பத்தியிலும், அணு மின் உற்பத்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவுரை வழங்கி உள்ளார்.

    English summary
    Why does Elon Musk want to increase petrol production, even if it is not good for Tesla cars?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X