விண்வெளியில் புதிய சாதனையை படைப்பாரா சுனிதா வில்லியம்ஸ்? ஆய்வாளர்கள் சொல்வது இதுதான்
நியூயார்க்: எதிர்பாராதவிதமாக சுனிதா வில்லியம்ஸ் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது. இதனயைடுத்து சுனிதா வில்லியம்ஸ் சில மாதங்கள் வரை விண்வெளியில் தங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்து புதிய சாதனையை படைப்பாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.
இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை 'ஸ்டார்லைனரின்' பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார்லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். அவரை அழைத்து சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் இரு தினங்களுக்கு முன்பு, ஆள் இல்லாமல் பூமிக்கு வந்து சேர்ந்தது.
சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு அழத்துவரப்படுவார் என்று நாசா கூறியுள்ளது. இப்படி இருக்கையில், நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர் எனும் சாதனையை சுனிதா வில்லியம்ஸ் பெறுவாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
அதாவது, விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஃபிராங்க் ரூபியோதான். அமெரிக்காவை சேர்ந்த இவர் தொடர்ந்து 371 நாட்கள் வரை விண்வெளியில் தங்கியிருக்கிறார். இதுவரை வேறு எந்த விண்வெளி வீரரும் விண்வெளியில் இவ்வவளவு நாட்கள் தங்கியது கிடையாது.
இந்த லிஸ்டில் சுனிதா வில்லியம்ஸ் 7வது இடத்தில் இருக்கிறார். இவர் வரும் பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புவார். அப்படியெனில் விண்வெளியில் சுமார் 240 நாட்கள் செலவிடுவார். இவருடைய மொத்த பயண நாட்கள் 560ஐ தாண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications