என்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்கப் பெண் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தனது சகோதரியின் காதல் புரோபோசலை போட்டோ எடுப்பதற்காக புதர் போல் வேடமணிந்து சென்றிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.

உலகில் விநோதமான செய்திகளுக்கு பஞ்சமில்லை. இதுவும் ஒரு விநோமான செய்திதான். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

woman dresses up like a bush for a secret operation

தெரேஸ் மெர்கல் தனது டிவிட்டர் பக்கத்தில் மூன்று புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு படங்களில் அவர் புதர் போல் நிற்கிறார். ஒரு புகைப்படத்தில் ஒரு பெண்ணும் ஆணும் இருக்கிறார்கள்.

அதாவது தெரேஸ் தனது சகோதரியின் காதல் புரொபோசலை மறைந்திருந்து புகைப்படம் எடுப்பதற்காக புதர் போல் உடையணிந்திருக்கிறார். தனது சகோதரி லவ் புரொபோஸ் செய்யும் அந்த தருணத்தை வெற்றிகரமாக மறைந்திருந்து புகைப்படம் எடுத்துவிட்டார் தெரேஸ்.

அவரது இந்த பதிவை 21000 பேர் ரீடிவீட் செய்துள்ளனர். 1.7 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் தெரேஸை பாராட்டி வருகின்றனர். தங்களுக்கு இப்படி ஒரு சகோதரி இல்லையே என பலர் ஏக்கம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் வைரலாகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+