Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே டிரெண்டிங்! அமெரிக்காவைக் கலக்கும் யூடியூபர் "தமிழ்ப் பையன்"! – யார் இந்தச் சிறுவன்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் யூடியூப் நடத்துகிறார் ஒரு தமிழ்ப் பையன். சானல் பெயர் என்ன தெரியுமா? 'தமிழ்ப் பையன்'தான். இவர் அமெரிக்காவில் ஒரு அரசுப் பள்ளியில் படிக்கிறார். அவர் அமெரிக்க அரசுப் பள்ளியில் இருக்கும் வசதிகள் குறித்துப் போட்ட வீடியோ சுமார் 34 லட்சம் பார்வையாளர்களைச் சுண்டி இழுத்திருக்கிறது? தமிழ்ப் பையனாக வலம் வரும் இந்தச் சின்னப் பயன் யார்? அவரைத் தொடர்பு கொண்டோம்.

"என் சொந்த ஊர் புதுக்கோட்டை. அப்பா ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் 3 ஆம் வகுப்பு வரை ஊரில்தான் படித்தேன். அப்புறம் 2016இல் நாங்கள் அமெரிக்கா வந்தோம். இப்போ நான் அட்லாண்டா பள்ளியில் 9வது கிரேடு படிக்கிறேன்" எனக் கூறும் தமிழ்ப் பையனின் உண்மையான பெயர் சித்தார்த் ராகவன்.

அப்பா ஐடி கம்பெனியில் வேலை பார்த்தாலும் அம்மா ஹவுஸ் ஒய்ஃப் ஆகவே இருக்கிறார். குடும்பத்தினரின் ஆதரவுதான் யூடியூப் நடத்த உதவியாக உள்ளது என்கிறார் சித்தார்த்.

தமிழ் பள்ளி

தமிழ் பள்ளி

"அட்லாண்டாவில் லட்சுமி தமிழ்ப் பள்ளி ஒன்று இருக்கிறது. அங்கு வார இறுதி நாட்களில் தமிழ் படிக்கிறேன். அங்க நடக்கின்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். எனக்குத் தமிழ் மீது ஆர்வம் அதிகம். அதுவும் மேடை பேச்சு என்றால் அதிகம் பிடிக்கும்" என்கிறார் தமிழ்ப் பையன் சித்தார்த்.

அமெரிக்கவாசிகளைப் போல சரளமாக ஆங்கிலம் பேசுகிறீர்களே எப்படி என்றோம். அதற்கு அவரது அப்பா, "இவனது ஆங்கில உச்சரிப்பு எங்களுக்கே ஒரு சில நேரங்களில் புரியாது. அந்தளவு அமெரிக்கச் சிறுவர்களிடம் இவன் வேகமாகப் பேசுவான். அது இங்கு வந்த பிறகுதான் நடந்தது" என்கிறார் சித்தார்த் தந்தை.

அமெரிக்கவாசிகளைப் போல சரளமாக ஆங்கிலம் பேசுகிறீர்களே எப்படி என்றோம். அதற்கு அவரது அப்பா, "இவனது ஆங்கில உச்சரிப்பு எங்களுக்கே ஒரு சில நேரங்களில் புரியாது. அந்தளவு அமெரிக்கச் சிறுவர்களிடம் இவன் வேகமாகப் பேசுவான். அது இங்கு வந்த பிறகுதான் நடந்தது" என்கிறார் சித்தார்த் தந்தை.

தமிழ்ப்பற்று

தமிழ்ப்பற்று

"எட்டு வயதில் அமெரிக்கா வந்த போது எனக்கும் இவர்கள் பேசும் ஆங்கிலம் கஷ்டமாகத்தான் இருந்தது. போகப்போக நான் பழகிக் கொண்டேன். அது ஒன்று பெரிய விஷயம் இல்லை. இங்கேயே வசிக்கிறேன். இங்கே படிக்கிறேன். ஆகவே அது சாத்தியம்தான்" என்கிறார் சித்தார்த்.

தமிழை விடாமல் பேசுகிறீர்களே என்றால், "கட்டாயம் மறக்க மாட்டோம். வீட்டில் உள்ள போது கட்டாயம் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என அம்மா, அப்பா கட்டளைப் போட்டு உள்ளார்கள். எனவே தமிழ் எனக்கு மறக்காது. அதைவிட எனக்கு இயல்பாகவே தமிழ் மேடைப் பேச்சாளனாக வேண்டும் என்பது கனவு" எனக்கூறும் சித்தார்த் விரைவில் 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படிக்கப் போவதாகக் கூறுகிறார்.

வீடியோ வியூஸ்

வீடியோ வியூஸ்


அவரிடம் அமெரிக்க அரசுப் பள்ளி பற்றிப் போட்ட வீடியோ 30 லட்சங்களைக் கடந்துவிட்டதே என்றோம். "ஆமாம். முதலில் சானல் தொடங்கும் போது தமிழ் சம்பந்தமான விஷயங்களை மட்டுமே போட்டேன். ஆனால் அமெரிக்காவிலிருந்து கொண்டு அதைப் போட்டதால் பலரையும் அது ஈர்க்கவில்லை.

அதன்பிறகு அமெரிக்க வாழ் தமிழனாக இங்குள்ள வாழ்க்கையைக் காட்டும் படி வீடியோ எடுத்துப் போட ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு எல்லோருக்கு நன்றி" என்கிறார் தமிழ்ப் பையன்.

சித்தார்த் வெளியிட்டுள்ள அமெரிக்கப் பள்ளி பார்ப்பதற்கு அரசுப் பள்ளி போல் தெரியவே இல்லை. நமது ஊர் இண்டநேஷனல் ஸ்கூல் அளவுக்கு உள்ளது. அதன் கட்டுமானமும், உட்கட்டமைப்பும் மிகப் பிரமாண்டமாக உள்ளது.

அதன்பிறகு அமெரிக்க வாழ் தமிழனாக இங்குள்ள வாழ்க்கையைக் காட்டும் படி வீடியோ எடுத்துப் போட ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு எல்லோருக்கு நன்றி" என்கிறார் தமிழ்ப் பையன்.

புத்தகம் இலவசம்

புத்தகம் இலவசம்

"இங்கு உள்ள அரசுப் பள்ளிகளில் புத்தகம் இலவசம். படிக்கப் பணம் இல்லை. வீட்டிலிருந்து பள்ளிக்கு வர வாகனம் இலவசம். மதியச் சாப்பாடும் கூட இலவசம். நீங்கள் விரும்பவில்லை என்றால் வீட்டில் இருந்து கொண்டு வந்து சாப்பிடலாம்" என்கிறார்.

தமிழ்ப் பையன் சித்தார்த் இங்குள்ள பள்ளியில் ப்ரெஞ்ச் படிக்கிறார். வேறு சில மொழிகளைக் கற்கிறார். நாம் அவரிடம் யூடியூப் பற்றி கேட்டோம்.

"எனது முதல் ஹாபி அதுதான். முன்பு வெளியே நடப்பதை அதிகம் விரும்புவேன். இப்போது அதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு யூடியூப் வீடியோ போடுகிறேன். இப்போது நானே எடிட்டிங் கற்றுக் கொண்டு எடிட் செய்கிறேன். படிப்பு நேரம் போக இந்த வேலைக்கே சரியாக உள்ளது" என்கிறார் சித்தார்த்.

லாக்கர் வசதி

லாக்கர் வசதி

மீண்டும் அமெரிக்கப் பள்ளி முறை குறித்து அவரது பேச்சுத் திரும்பியது. " இங்கே 1 முதல் 5 முதல் ஒரு பகுதி படிப்பு. அப்புறம் 6 முதல் 8 வரை மிடில் ஸ்கூல். 9 முதல் 12 வரை ஹைஸ் கூல். நமது ஊரில் ஒரே வகுப்பறையில் பசங்கள் உட்கார்ந்திருப்பார்கள். பாடத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மாறுவார்கள். ஆனால் இங்கே பாடத்திற்கு ஏற்ப நாம் தான் வேறு வகுப்புக்குப் போக வேண்டும். ஆசிரியர்கள் ஒரே அறையில்தான் இருப்பார்கள்.

இது அரசுப் பள்ளி என்றாலும் தனித்தனியே லாக்கர் வசதி உண்டு. நமது புத்தகங்களை அங்கே வைத்துவிட்டு, வகுப்புக்குத்தக்கப் புத்தகங்களை மட்டும் பிரித்து எடுத்துச் செல்லலாம். இங்கே பள்ளி பிள்ளைகளுக்குச் சீருடை இல்லை. கலர் ட்ரெஸ் போட்டு வரலாம். படிப்பு போக போட்டோகிராஃபி போன்ற இதர விஷயங்களைக் கற்கலாம்.

மேலும் லத்தின், ஸ்பானிஷ், சைனீஸ் என எந்த மொழியையும் கற்கலாம்" என்கிறார் தமிழ்ப்பையன் சித்தார்த். இவரது சானலுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர். அத்தனைப் பேரையும் வீடியோ தொடக்கத்தில், 'நான் உங்கள் தமிழ்ப்பையன் என்றென்றும் உங்கள் நண்பன்' எனச் சொல்லி அழைப்பதைத் தனி ஸ்டைலாக கடைப்பிடிக்கிறார் இவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+