நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தடுத்த முகாம்கள்.. நீலகிரியில் ஒரே நாளில் 13, 761 பேருக்கு தடுப்பூசி.. விறுவிறு பணி..!

நீலகிரியில் 10வது கட்ட தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரியில் நடத்தப்பட்ட 10-ம் கட்ட முகாமில், 13,761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் நீலகிரியையும் இந்த தொற்று விட்டுவைக்கவில்லை.. இதையடுத்து மாவட்டத்தின் எல்லைகள் அடைக்கப்பட்டு தீவிர முயற்சிகள் கையில் எடுக்கப்பட்டன. தடுப்பூசிகளை செலுத்துவதிலும் மாவட்ட மக்கள் ஆர்வம் காட்டினர்.

இதனிடையே, தமிழக முதல்வர் நீலகிரிக்கு, அதிக அளவிலான தடுப்பூசி வழங்கியதாலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் ஊக்
குவிப்பாலும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி 100 சதவிகிதம் செலுத்தப்பட்டது...

எங்கே போனார்? கரூர் மாணவி தற்கொலை.. குமுறிய மாணவர்கள்.. சட்டென விசிட் அடித்த செந்தில் பாலாஜி! எங்கே போனார்? கரூர் மாணவி தற்கொலை.. குமுறிய மாணவர்கள்.. சட்டென விசிட் அடித்த செந்தில் பாலாஜி!

தடுப்பூசி

தடுப்பூசி

இதையடுத்து, தமிழ்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையை பெற்றிருக்கிறது.. அதுமட்டுமல்ல, நாட்டிலேயே பழங்குடி மக்களுக்கு 100 சதவிகித கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற நம்பிக்கையையும் நீலகிரி பெற்றுள்ளது.. சுகாதாரத்துறை உட்பட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதால்தான் இந்த இலக்கை மாவட்ட நிர்வாகத்தினால் அடைய முடிந்தது..

நிர்வாகம்

நிர்வாகம்

எனினும், அடுத்த 3 மாதங்களுக்குள் 2வது தவணை தடுப்பூசியையும் முழுமையாக செலுத்தி முடிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. கடந்த வாரம் நடந்த 9-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில், மாவட்டம் முழுவதும் 266 நிலையான தடுப்பூசி மையங்கள், 20 நடமாடும் வாகனங்கள் என மொத்தம் 286 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 முதல் டோஸ்

முதல் டோஸ்

இந்நிலையில், சமீபத்தில் 10-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்து முடிந்துள்ளது... 256 நிலையான மையங்கள் மற்றும் 20 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது... முதல் டோஸ் 45 வயதுக்கு மேல் 220 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 434 பேர் என 654 பேருக்கு செலுத்தப்பட்டது.

நம்பிக்கை

நம்பிக்கை

2-வது டோஸ் 45 வயதுக்கு மேல் 6 ஆயிரத்து 695 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 6,412 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 107 பேருக்கு போடப்பட்டது. 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்... இதையடுத்து விரைவிலேயே 2வது டோஸும் 100 சதவீத இலக்கை எட்டிப்பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

English summary
Nilgiri District Vaccine camp and 13 thousand 761 people vaccinated, Says Health Dept Officers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X