நீலகிரி: சமவெளி கோடையை மிஞ்சும் தேர்தல் அனல்.. திமுக- அதிமுக- பாஜக உக்கிர மோதல்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக இடையே மிக கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. 3 கட்சிகளுமே தேர்தல்களில் நீலகிரியில் வாகை சூடிய கட்சி என்பதால் களநிலவரம் ஊட்டியில் சமவெளி கோடையை விட காட்டமாக இருக்கிறது.

நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பவானிசாகர் (தனி), உதகமண்டலம், குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி (தனி). தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் தனித் தொகுதியானது. நீலகிரி தொகுதியில் 7 முறை வென்ற கட்சி காங்கிரஸ்தான். 2 முறை பாஜகவும் வென்றுள்ளது. திமுகவும் 2 முறை வென்றுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. 1980 முதல் 1991 வரையிலான 4 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸின் ஆர்.பிரபு தொடர்ந்து வென்ற தொகுதி இது. 2004-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆர். பிரபு வென்றார்.

Nilgiris Lok Sabha constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

நீலகிரி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,18,915; ஆண்கள்- 6,83,021; பெண்கள் - 7,35,797; 3-ம் பாலினத்தவர்- 97

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

ஆ. இராசா(திமுக) 3,16,802
சி. கிருட்டிணன்(மதிமுக)2,30,781
செல்வராஜ்(தேமுதிக)76,613
பதிரன்(கொமுபே) 32,776
குருமூர்த்தி(பாஜக) 18,69

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:

கோபாலகிருஷ்ணன்(அதிமுக) 4,63,700
ஆ. இராசா(திமுக) 3,58,760
பி. காந்தி(காங்கிரஸ்) 37,702

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

ஆ. ராசா(திமுக) 5,47,832
தியாகராஜன்(அதிமுக) 3,42,009
இராஜேந்திரன்(மக்கள் நீதி மய்யம்)41,169
எம். இராமசாமி(அமமுக)40,419

2024-ம் ஆண்டு களத்தில்...

ஆ.ராசா (திமுக)
லோகேஷ் தமிழ்ச் செல்வன் (அதிமுக)
எல்.முருகன் (பாஜக)
ஜெயக்குமார் (நாம் தமிழர் கட்சி)

நீலகிரி தொகுதி நிலவரம் என்ன?: பொதுவாக நீலகிரியில் வெளி மாவட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர். இதற்கு காரணம் 3 தொகுதிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் என பிற மாவட்டங்களைச் சேர்ந்தவையும் இடம் பெற்றுள்ளன. நீலகிரி லோக்சபா தொகுதி சுற்றுலா, விவசாயம் சார்ந்தது. படுகர் சமுதாய மக்கள், ஊட்டி- குன்னூர்- கூடலூரில் அதிகம் உள்ளனர். சுமார் 30% உள்ளனர். தலித்துகள் 20% உள்ளனர். மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் ஒக்கலிகா கவுடா (கவுடர்) 50% உள்ளனர். கொங்கு வேளாளர்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள், நாடார்கள், பழங்குடிகள் கணிசமான வாக்காளர்கள். நீலகிரி தொகுதியின் முதன்மை பிரச்சனையாக முன்வைக்கப்படுவது பச்சை தேயிலைக்கு உரிய விலை. கூடலூரில் நிலம் சார்ந்த சிக்கல் ஒரு பிரச்சனையாக கூறப்படுகிறது. ஊட்டியில் மூடப்பட்ட மத்திய அரசுக்கு சொந்தமான போட்டோ பிலிம் தொழிற்சாலைக்கு மாற்று ஒரு தொழிற்சாலை தேவை என்பதும் எதிர்பார்ப்பு. மனிதர்கள்- வன விலங்கு மோதல்களுக்கும் தீர்வு தேவை என்பது வாக்காளர்கள் கோரிக்கை. நீர் மின் திட்டங்கள், போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வும் கிடப்பில் கிடக்கும் கோரிக்கைகள். மேட்டுப்பாளையத்தை தென் மாவட்டங்களுடன் ரயி; பாதை மூலமாக இணைக்க வேண்டும் என்பதும் கோரிக்கை. காங்கிரஸ் அதிக முறை வென்ற தொகுதிதான். அண்மைக் காலமாக திமுகவும் அதிமுகவும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் திமுக- அதிமுக- பாஜக இடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+