நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சடசடவென சரிந்த வீடுகள்.. நீலகிரியை மிரட்டிய பேய் மழை.. 10 நாளுக்கு பிறகு குறைகிறது.. மக்கள் நிம்மதி

நீலகிரியில் 10 நாட்களுக்கு பிறகு கனமழை குறைந்து காணப்படுகிறது

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு, மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது.. இது மாவட்ட மக்களை நிம்மதியில் ஆழ்த்தி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது... குறிப்பாக, ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது..

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. செங்கல்பட்டை சேர்ந்த லாவண்யா முதலிடம் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. செங்கல்பட்டை சேர்ந்த லாவண்யா முதலிடம்

ஊட்டி மற்றும் குந்தாவில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது... இதனால், பல இடங்களில் மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டன..

 கூடலூர்

கூடலூர்

இதன்காரணமாக, ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாகவே விடுமுறை விடப்பட்டது... ஆனாலும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது.. இந்த 10 நாட்களாகவே, கடும் மழை பெய்து வரும் நிலையில், இதுவரை கூடலூர் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன... ஊட்டி - கூடலூர் சாலையில் நடுவட்டம் உட்பட மாவட்டத்தில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது...

 ஆரஞ்சு அலர்ட்

ஆரஞ்சு அலர்ட்

நீலகிரியில் தற்சமயம், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கூடலூர் பகுதிதான்.. இங்கு மழை நிற்காமல் பெய்து வருகிறது.. இதனால், மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது... இங்கு மழை அதிகம் பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது. எனவே, மண்சரிவு பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து, மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்..

 பழங்குடி மக்கள்

பழங்குடி மக்கள்

அந்தவகையில், 3 முகாம்களில் 40-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இவர்களில் 22 பேர், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பழங்குடி மக்களாவர்.. இவர்களின் வீடுகள் எல்லாம் பழமையானவை என்பதாலும், ஆற்றின் ஓரங்களில் உள்ளதாலும், அவைகள் மிகுந்த சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.. இங்கிருப்பது ஆபத்து என்பதால், இவர்களை பத்திரமாக அழைத்துவந்து முகாம்களில் தங்க வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்..

 படுக்கை வசதி

படுக்கை வசதி

மற்றொரு பக்கம், அவர்களின் வீடுகளை சீர்செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இம்மக்களுக்கு, உணவு, துணிமணிகள், உட்பட அனைத்து படுக்கை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தந்துள்ளது.. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மிரட்டி கொண்டிருந்த மழையானது, நேற்றில் இருந்து 60 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.. இது மாவட்ட மக்களை ஓரளவு நிம்மதியை தந்துள்ளது.. எனினும், மீட்பு நடவடிக்கை பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

English summary
When will the Nilgiris return to normal and after 10 days rain has decreased நீலகிரியில் 10 நாட்களுக்கு பிறகு கனமழை குறைந்து காணப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X