நொய்டா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிறந்தநாள் கொண்டாட்டம்.. காத்திருந்த இந்திய குடும்பம் - உக்ரைனில் சிக்கிய மகனுக்காக தவிக்கும் தந்தை

By
Google Oneindia Tamil News

நொய்டா: பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உக்ரைனில் இருந்து மகன் திரும்பி வருவான் என காத்திருந்த இந்திய குடும்பத்துக்கு போர் அறிவிப்பு வந்ததால், குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி இன்றோடு மூன்று நாட்கள் கடந்துள்ளது. போர் தீவிரம் அதிகரித்துள்ளதால், என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் கவலையில் உள்ளன.

உக்ரைனில் விமான சேவை துண்டிக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்தந்த நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன.

உக்ரைனில் சிக்கிய மாணவர்கள்.. மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்கணும்.. பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்உக்ரைனில் சிக்கிய மாணவர்கள்.. மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்கணும்.. பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்

இந்தியர்கள்

இந்தியர்கள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைகளுக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

 மாணவர்கள்

மாணவர்கள்

உக்ரைனில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றுள்ளனர். போர் தொடங்குவதற்கு முன்பே உக்ரைன் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சொந்த நாடுகளுக்கு கிளம்ப சொல்லி உத்தரவிட்டது. விமானம் கிடைத்தவர்கள், இந்தியா திரும்பினார்கள். பலர் உக்ரைனிலேயே வசித்து வருகிறார்கள்.

இந்திய குடும்பம்

இந்திய குடும்பம்

நொய்டாவில் வசித்து வருகிறார் ராஜேஷ் குமார். இவருடைய மகன் அக்ஷித் குமார். இவர் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார். போர் அறிவிப்பு வந்ததுமே, இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் அக்ஷித். விமான டிக்கெட் எடுத்து, இந்தியா வர தயாராக இருந்தார். கடைசி நேரத்தில் அவர் வரவிருந்த‌ விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் உக்ரைனிலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கியுள்ளார். அதேநேரம், உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

உக்ரைனில் இருந்து அக்ஷித் குமார் வந்ததும், அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர் குடும்பத்தினர். அக்ஷித் குமாருக்கு நேற்று பிறந்தநாள், மகன் போர் நடக்கும் நாட்டில் சிக்கியுள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் அரசாங்கத்தை நம்பி தினமும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் குடும்பத்தினர்.

Recommended Video

    சீக்கிரம் எங்களை India-க்கு கூட்டிட்டு போக வேண்டும்.. Ukraine-ல் சிக்கி தவிக்கும் தமிழக மாணவிகள்
    அக்ஷித் குமார்

    அக்ஷித் குமார்

    ராஜேஷ்குமார் குடும்பத்தினர், உக்ரைனில் இருக்கும் அக்ஷித் குமாருடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். உக்ரைனில் படிக்கும் இந்தியர்களுடன் அங்கிருக்கும் பங்கர்களில் இரவுகளைக் கழிப்பதாக தெரிவித்துள்ளார். ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க முடியாத அளவு கூட்டம் அதிகரித்துள்ளது. சரியான உணவு இல்லாமல் மகன் கஷ்டப்படுவதைக் கேட்டு ராஜேஷ் குமார் குடும்பம் சோகத்தில் உள்ளது.

    English summary
    The family is in mourning as the announcement of war comes to an Indian family waiting for their son to return from Ukraine for a birthday celebration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X