குட் நியூஸ்.. திண்டுக்கல் மக்களுக்கு தென்னக ரயில்வே சொன்ன சூப்பர் செய்தி.. இனி ஈஸியா பயணிக்கலாம்!
மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கையையடுத்து தென்னக ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி மயிலாடுதுறையிலிருந்து நேரடியாக மதுரைக்கும், செங்கோட்டைக்கும் செல்ல முடியும்.
திண்டுக்கல் மட்டும் இயக்கப்பட்டிருந்த இந்த ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இணைப்பு
சோழ மண்டலமான மயிலாடுதுறையிலிருந்து தென் மாவட்டங்களை இணைப்பது மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ்தான். ஆனால் இது திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். இந்நிலையில் இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து தற்போது இந்த ரயில் மதுரை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை டூ செங்கோட்டை
ஏறத்தாழ 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை கொண்டிருக்கும் இந்த ரயில் பயணம் வரும் அக்டோபர் 1ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது வண்டி எண் 16847/16848 (மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்கஸ்பிரஸ்) ரயில் காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு வழக்கமாக மாலை 4 மணியளவில் திண்டுக்கல் வந்து சேரும். அதேபோல வண்டி எண் 06665/06662 (56735/56732) (மதுரை-செங்கோட்டை ஸ்பெஷல்) மதுரையிலிருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு இரவு 9.25 மணியளவில் செங்கோட்டை சென்றடைகிறது.

மதுரைக்கும்
தற்போது இந்த இரு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக மாற்ற தென்னக ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதன்படி இது வண்டி எண் 16847/16848 மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரும் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு வழக்கமாக மாலை 4 மணியளவில் திண்டுக்கல் வந்து சேரும் இந்த ரயில் அப்படியே மதுரைக்கு செல்கிறது.

திண்டுக்கல் டூ மதுரை
திண்டுக்கல்லிலிருந்து மாலை 4.20க்கு புறப்படும் இந்த ரயில், மாலை 5.25க்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேர்கிறது. பின்னர் மதுரையிலிருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு இரவு 9.25 மணிக்கு செங்கோட்டை வந்து சேர்கிறது. அதேபோல காலை 7 மணிக்கு செங்கோட்டையிலிருந்து செல்லும் இந்த ரயில், மதுரைக்கு 10.30 மணிக்கு மதுரை வந்து சேர்கிறது. அங்கிருந்து 10.35க்கு புறப்பட்டு 11.50க்கு திண்டுக்கல் வருகிறது. பின்னர் 12.10க்கு திண்டுக்கல்லிலிருந்து புறப்பட்டு மாலை 5.20க்கு மயிலாடுதுறைக்கு வந்து சேர்கிறது.
இந்த பணத்தில் இரு மார்க்கங்களிலும் மதுரை, திருமங்கலம், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி என நிறுத்தங்களில் சென்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணைப்பு ரயில் அறிவிப்பால் தென்னக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications