For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தல்: தடுப்பூசியை வேகப்படுத்துங்கள்: ராகுல் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கொரோனா வைரஸுக்கு ஓமைக்ரான் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

Omigron Corona virus is the biggest threat: speed up vaccination: Rahul warns

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது இந்த வைரஸ். கொரோனாவுக்காக கண்டறியப்பட்ட தடுப்பூசியையும் அதிகமாக எதிர்க்கும் ஆற்றல் கொண்டது, இதன் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று உலக நாடுகளின் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனா விவகாரத்தை ஆரம்பம் முதலே எச்சரித்துவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இம்முறையும் ஓமைக்ரான் குறித்து எச்சரித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில், " கரோனா வைரஸில் புதிய வகையான வைரஸ் (ஓமைக்ரான்) பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். நம்முடைய தேசத்தில் உள்ள மக்கள் ஒவ்வொருக்கும் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு தீவிரமான கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஒருவரின் புகைப்படத்துக்கு பின்னால், தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான மோசமான, எண்ணிக்கையை மறைத்து வைக்க முடியாது" எனத் தெரிவித்துளார்.

இந்தியாவில் இதுவரை 121.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் அலை வந்தபோது முதன்முதலில் எச்சரித்தது ராகுல் காந்தி. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைவிட அதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது என்று முதல் நபராக ராகுல் எச்சரித்தார்.

2 வது அலை வருவதற்கு முன்பும் ராகுல் காந்தி மத்திய அரசை எச்சரித்தார். பொருளாதார சரிவும், கரோனா தடுப்புமுறைகளையும், லாக்டவுனை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று விமர்சித்து எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஓமைக்ரான் வைரஸ் குறித்து ராகுல் காந்தி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தது.

 கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை

ஓமைக்ரான் வைரஸ் அச்சத்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரி்க்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய சுகாதாரத்துறையும் விமானங்களை இயக்குவது குறித்து எச்சரித்துள்ளது.

English summary
Omigron Corona virus is the biggest threat: speed up vaccination: Rahul warns
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X