ராமர் கடவுள் இல்லை.. கதையில் ஒரு கேரக்டர் அவ்வளவுதான்.. பாஜக கூட்டணி தலைவர் “பகீர்”.. பரபர பீகார்!
பாட்னா : ராமர் கடவுள் இல்லை எனவும் ராமர், துளசிதாஸ் மற்றும் வால்மீகி அவர்களின் செய்தியை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் என பீகார் மாநில முன்னாள் முதல்வரும், பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளது பீகார் அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.
குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை ராம நவமி கொண்டாட்டத்தின் போது மோதல் வெடித்தது. இதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகரத்தின் வழியாகச் சென்ற ராம நவமி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து தீவைப்பு மற்றும் வன்முறை ஏற்பட்டது.

ராமர் சர்ச்சை
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக அரசு 94 பேரை கைது செய்துள்ளது மற்றும் ஊர்வலத்தின் மீது கற்களை வீசியவர்களைக் குறிவைத்து சொத்துக்களை புல்டோசர் இடிப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ராமர் பிறந்த நாளைக் கொண்டாடும் ராம நவமிக்காக நடத்தப்பட்ட ஊர்வலங்களின் போது ஏற்பட்ட மோதல்களின் பின்விளைவுகளை சில மாநிலங்கள் கையாளும் நேரத்தில் ராமர் கடவுள் இல்லை எனவும் ராமர், துளசிதாஸ் மற்றும் வால்மீகி அவர்களின் செய்தியை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் என ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.

ராமர் கடவுள் இல்லை
இதுகுறித்து பேசிய மஞ்சி, ""நான் ராமரை நம்பவில்லை. ராமர் கடவுள் இல்லை. ராமர் துளசிதாஸ் மற்றும் வால்மீகி அவர்களின் செய்தியை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம்" என்று முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார். "அவர்கள் ராமாயணத்தை எழுதினார்கள், அவர்களின் எழுத்துக்களில் பல நல்ல பாடங்கள் உள்ளன. அதை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ராமரை அல்ல, துளசிதாஸ் மற்றும் வால்மீகியை நம்புகிறோம்" என்றார்

பீகார் முன்னாள் முதல்வர்
பீகாரில் நிதிஷ் குமார்-பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவையில் ஜிதன் ராம் மஞ்சினுடைய மகன் சந்தோஷ் மாஞ்சி பங்கேற்ருக்கும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் தலைவரான மஞ்சி, இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்வில் வியாழக்கிழமை உரையாற்றினார்.

உலகத்தில் இரண்டு ஜாதிகள்
"நீங்கள் ராமரை நம்பினால், நாங்கள் எப்பொழுதும் கேள்விப்பட்ட கதை என்னவென்றால், ராமர் ஷபரி ருசித்த பழத்தை சாப்பிட்டார். நாங்கள் கடித்த பழத்தை நீங்கள் சாப்பிட மாட்டீர்கள், ஆனால் குறைந்தபட்சம் நாட்டில் நாங்கள் தொட்டதையாவது சாப்பிடுங்கள் என்று மஞ்சி கூறினார். இந்த உலகத்தில் இரண்டு ஜாதிகள் தான் இருக்கிறது என்றார் - பணக்காரர் மற்றும் ஏழை. பிராமணர்கள் தலித்துக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications