எல்லாமே பொய்.! மோடி இன்னொரு முறை பிரதமரானால், அவ்வளவு தான்.. முதல்முறையாக ஓப்பனாக விளாசிய பிகே
பாட்னா: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விலைவாசி உயர்வு தொடர்பான விவகாரத்தில் முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 2014 மக்களவை தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆலோசகராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். அந்தத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதன் பின்னரே பிரசாந்த் கிஷோர் தேசிய அளவில் கவனிக்கப்படும் நபர்களில் ஒருவர் ஆனார். அவர் அதன் பின்னர் பணியாற்றிய அனைத்து கட்சிகளும் தேர்தல்களில் வெற்றி பெற்றன.
பரங்கிமலை மாணவி கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே போன் பண்ணுங்க!

பிரசாந்த் கிஷோர்
டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழ்நாடு என்று பல்வேறு மாநிலங்களிலும் இவர் வெற்றி தடம் பதித்தார். குறிப்பாகக் கடந்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு என இரு தேர்தல்களிலும் முறையே திரிணாமுல் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக அவர் பணியாற்றினார். அந்த தேர்தல் சமயத்தில் பாஜகவினர் இவரை ஓப்பனாகவே விமர்சிக்கத் தொடங்கினர். அந்த தேர்தலுக்குப் பின்னரே, இனி யாருக்கும் தேர்தல் ஆலோசகராக இருக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

விரைவில் புதிய கட்சி
அடுத்து இப்போது அவர் அரசியல் அரங்கில் களமிறங்கச் சத்தமில்லாமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது சொந்த மாநிலமான பீகாரில் அவர் விரிவான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார். அங்கு பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து நேரில் உரையாடி வரும் பிரசாந்த் கிஷோர் மிக விரைவில் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலிண்டர் விலை
இதனிடையே பீகாரில் தனது மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் கிராம மக்களிடையே அவர் போஜ்புரி மொழியில் உரையாடினார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் பிகே, "மோடிக்காக நாம் கோஷமிட்டோம்.. அவரும் பிரதமராகிவிட்டார்.. ஆனால் அதன் பின் என்ன நடந்தது? சமையல் எரிவாயு விலை உயர்ந்தது.. சிலிண்டர் விலை ரூ.500இல் இருந்து ரூ.1,300 ஆக உயர்ந்தது.

இன்னொரு முறை பிரதமரானால்
அவர் இன்னொரு முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால். சிலிண்டரின் விலை ரூ.2,000ஐ எட்டிவிடும். ரூ. 200 மதிப்பிலான ஐந்து கிலோ உணவு தானியங்கள் தருகிறார்கள். நமக்கு அது தேவையில்லை. அதற்குப் பதிலாக கேஸ் சிலிண்டர்களை ரூ.500க்கு கொடுங்கள். அதுவே போதும்" என்றார். விலைவாசி உயர்வு விவகாரத்தில் அவர் பிரதமர் மோடியை நேரடியாகச் சாடியுள்ளது இதுவே முதல்முறையாகும்.

எல்லாமே பொய்
தொடர்ந்து பேசிய பிகே, "தேர்தல் சமயத்தில் பீகார் மக்களுக்கு மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இங்கு நலிந்து வரும் சர்க்கரை ஆலைகளைப் புத்துயிர் அளிப்பதாகவும், உள்நாட்டுச் சர்க்கரைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எல்லாம் கூறினார்.. ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. அனைத்தும் பொய்யான வாக்குறுதிகளாகப் போய்விட்டன.

எதுவும் கிடைக்கவில்லை
இன்னும் கூட குஜராத்தில் தான் தொடர்ந்து பல்வேறு புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருகிறது. நமது மாநில இளைஞர்கள் இன்னும் குஜராத்திற்குத் தான் செல்ல வேண்டி உள்ளது. மக்களவைக்கு 26 உறுப்பினர்களை மட்டுமே அனுப்பும் குஜராத்திற்கு இத்தனை கொடுக்கிறார்கள். ஆனால், 40 எம்பிகளை அனுப்பும் பீகாருக்கு எதுவுமே கிடைப்பதில்லை" என்று அவர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.