பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாயமானவர்கள் மீண்டு வர பிரார்த்திகிறேன்...நிதிஷ்குமார் ட்விட்டரில் உருக்கம்

Google Oneindia Tamil News

பாட்னா : உத்திரகாண்ட் சம்பவத்தில் சிக்கி, மாயமாகி உள்ளவர்கள் பத்திரமாக மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ட்விட்டரில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

உத்திரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் பகுதியில் இருந்து 24 கி.மீ., தொலைவில் உள்ள பன்ங் கிராமத்தில் உள்ள பனிப்பாறை உடைத்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மின் திட்ட பணிகளுக்காக வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்ட சுமார் 150 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

 prayer for those trapped in the Uttarakhand disaster, Bihar CM Nitish Kumar on his tweet

மாயமானவர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறகையில், இந்த சம்பவம் பற்றி இப்போது தான் எனக்கு தகவல் கிடைத்தது. இது கங்கை நதி தொடர்பான விவகாரம் என்பதால் அதிகாரிகளிடம் அது பற்றி பேசி வருகிறேன். ஒரு சம்பவம் நடந்தால் மற்றொரு சம்பவம் அதே போல் நடக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

தொடர்ந்து ட்விட்டரிலும் கருத்து பதிவிட்ட அவர், உத்திரகாண்ட் பேரிடரில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் மீண்டு வரவும், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் நலமுடன் வர பிரார்த்தனை செய்கிறேன். ஒட்டுமொத்த பீகார் மக்களும் பேரிடரால் பாதிக்கப்பட்ட உத்திரகாண்ட் மக்களுடன் உள்ளனர். உத்திரகாண்ட் முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு எங்கள் அதிகாரிகள் நிலவரம் குறித்து கேட்டு வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 17 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்! சமோலியில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம்.. சிக்கிய 17 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

இச்சம்பவத்தை தொடர்ந்து கங்கை நதிக்கரைகளில் வாழும் மக்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அலக்நந்தா மற்றம் தவ்லி ஆற்றங்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
prayer for those trapped in the Uttarakhand disaster, Bihar CM Nitish Kumar on his tweet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X