பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வா அடிச்சு பழகலாம்".. நடுரோட்டில் 60 வயது ஆசிரியரை இரக்கமன்றி அடித்த பெண் காவலர்கள்.. பீகாரில் ஷாக்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் எந்த தவறும் செய்யாத 60 வயது ஆசிரியரை பெண் காவலர்கள் இருவர் இரக்கமின்றி சரமாரியாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆசிரியரை அவர்கள் லத்தியால் அடிப்பதை பார்க்கும் போது, இதுபோன்ற நபர்கள்தான் நமக்கு அடித்து பழகுவதற்கு சரியான வாய்ப்பு என்பது நினைத்து அவர்கள் தாக்குவது போல இருந்தது.

இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் கண்டனத்துக்கு உள்ளாகிய நிலையில், அந்தக் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனைவி கோபமாக இருக்காங்க.. லீவ் தாங்க! உயரதிகாரிக்கு லெட்டர் போட்ட காவலர்.. பறந்து வந்த மனைவி கோபமாக இருக்காங்க.. லீவ் தாங்க! உயரதிகாரிக்கு லெட்டர் போட்ட காவலர்.. பறந்து வந்த

கீழே விழுந்த ஆசிரியர்

கீழே விழுந்த ஆசிரியர்

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் ப்ரஹூலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவல் கிஷோர் பாண்டே. 60 வயதான இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தனது பேரக்குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்குவதற்காக தனது சைக்கிளில் கடைவீதிக்கு அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று உரசி சென்றுள்ளார். இதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

சரமாரி அடி உதை

சரமாரி அடி உதை

கீழே விழுந்த அவருக்கு இடுப்பில் அடிபட்டதால் உடனடியாக எழ முடியவில்லை. இதனால் அவருக்கு பின்னால் வந்த வாகனங்கள் நின்றதால் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பெண் காவலர்கள், நவல் கிஷோரை அங்கிருந்து நகர்ந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர் மெதுவாக சென்றதால் கோபமடைந்த அவர்கள் இருவரும், தங்கள் கையில் இருந்த லத்தியை வைத்து அவரை சரமாரியாக அடித்தனர்.

மூர்க்கத்தனமான தாக்குதல்

மூர்க்கத்தனமான தாக்குதல்

இதை பார்த்த அங்கிருந்தவர்கள், அந்தப் பெண் காவலர்களை பார்த்து, "வயதானவராக இருக்கிறார். அவரை போட்டு இப்படி அடிக்கிறீர்களே.." எனக் கேட்டனர். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நவல் கிஷோரை கடுமையாக தாக்கினர். முதியவர் என்று கூட பார்க்காமல் தலை, முகம், கால் என அனைத்து இடங்களிலும் அவர்கள் மூர்க்கத்தனமாக லத்தியை கொண்டு தாக்கினர்.

3 மாதம் சஸ்பெண்ட்

3 மாதம் சஸ்பெண்ட்

அந்த முதியவரோ அடி தாங்க முடியாமல் அலறினார். பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த பெண் காவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து அந்த பெண் காவலர்களை 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து கைமூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். மேலும், துறைரீதியான விசாரணைக்கு பிறகு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

English summary
In Bihar, an innocent 60-year-old teacher was mercilessly beaten up by two women police constables. When they saw the teacher being beaten with a lathi, it was as if they thought that such people are the perfect opportunity for us to beat them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X