பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன?

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டமேலவை தேர்தலில் (எம்.எல்.சி) மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன் திடீரென பாஜகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான ஜேடியூவை விட பாஜக கூடுதல் இடங்களில் வென்றது. ஆனாலும் ஏற்கனவே அறிவித்தபடி ஜேடியூவின் நிதிஷ்குமார் முதல்வராக்கப்பட்டார். இருப்பினும் சட்டசபை தேர்தலில் பாஜக, நம்ப வைத்து கழுத்தை அறுத்ததை ஜேடியூவால் இன்னமும் ஜீரணிக்கவும் முடியவில்லை.

அத்துடன் அருணாச்சல பிரதேசத்தில் தங்களது கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்ததையும் ஜேடியூவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் பீகாரில் பாஜக-ஜேடியூ அரசு எத்தனை காலம் நீடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பீகார் எம்.எல்.சி. தேர்தல்

பீகார் எம்.எல்.சி. தேர்தல்

இந்நிலையில் 2 தொகுதிகளுக்கான எம்.எல்.சி. தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரான ஷாநவாஸ் ஹூசைன், பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாஜகவின் முஸ்லிம் முகங்களில் ஒருவராக நீண்டகாலமாக திகழ்பவர் ஷாநவாஸ் ஹூசைன்.

டெல்லி டூ பீகார்

டெல்லி டூ பீகார்

1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று வாஜ்பாய் அமைச்சரவையில் 30 வயதிலேயே மத்திய அமைச்சரானார். அதன்பின்னர் 2 முறை லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2014 லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் ஷாநவாஸ் ஹூசைன் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கப்படுவோம் என ஷாநவாஸ் ஹூசைன் எதிர்பார்த்தார். ஆனால் கட்சி பொறுப்பில் மட்டுமே அவர் இருந்து வந்தார். 2019-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட சீட்டே கொடுக்கப்படவும் இல்லை. ஒருகட்டத்தில் டெல்லி வாசத்தை முடித்துக் கொண்டு அவர் பீகாருக்கே திரும்பிவிட்டார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்

அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடந்த போது ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டு பணியாற்றினார் ஷாநவாஸ். இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றது. இந்நிலையில்தான் பாஜகவின் எம்.எல்.சி. வேட்பாளராக ஷாநவாஸ் ஹூசைன் அறிவிக்கப்பட்டுள்ளார். பீகாரில் பாஜகவுக்கு முதல்வர் வேட்பாளர் முகம் என்பது இதுவரை இல்லாத நிலைதான் இருந்து வருகிறது.

எம்.எல்.சி. வேட்பாளர்

எம்.எல்.சி. வேட்பாளர்

இப்போது ஷாநவாஸ் ஹூசைன் எம்.எல்.சியாக்கப்பட்டு நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவும் இருக்கிறார். இதுஒருவகையில் நிதிஷ்குமாருக்கு எதிரான பாஜகவின் வியூகமாகவும் பார்க்கப்படுகிறது.

நிதிஷ் vs ஷாநவாஸ் ஹூசைன்

நிதிஷ் vs ஷாநவாஸ் ஹூசைன்

நிதிஷ்குமாருக்கும் ஷாநவாஸ் ஹூசைனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். 2019 லோக்சபா தேர்தலில் தம்மை போட்டியிடவிடாமல் செய்ததே நிதிஷ்குமார்தான் என்கிற குற்றச்சாட்டை பொதுவெளியிலேயே வைத்திருந்தார். கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரை பழிவாங்கும் வகையில் ஜேடியூவை வீழ்த்த சிராக் பாஸ்வானை களமிறக்கியதிலும் ஷாநவாஸ் ஹூசைன் பங்கு முக்கியம் என பார்க்கப்படுகிறது.

பீகாரில் பார்முலா

பீகாரில் பார்முலா

இதனால் இனி ஷாநவாஸ் ஹூசைன் பீகாரில் தமது ஆட்டத்தை தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னொரு பக்கம், பாஜகவைப் பொறுத்தவரை உபி, பீகார் தேர்தல்களில் முஸ்லிம்களை வேட்பாளர்களாகவும் நிறுத்துவதில்லை; அமைச்சர்களாக்கவும் இல்லை. பின்னர் இது தொடர்பான விமர்சனங்களை தவிர்க்க முஸ்லிம்களில் ஒருவரை எம்.எல்.சி.யாக்குவது என்பதும் பாஜகவின் பார்முலா. இதே பார்முலாவைத்தான் இப்போது பீகாரில் ஷாநவாஸ் ஹூசைனை முன்வைத்து பாஜக செயல்படுத்துகிறது என்கின்றன கருத்தும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP's Former Union Minister Shahnawaz Hussain contest in Bihar MLC Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X