ஆன்மீகமும் வீரமும் நிறைந்த மாவட்டம்..என் மீது நம்பிக்கை வைக்கும் மக்கள்..முதல்வர் நெகிழ்ச்சி
தென்காசி: மாவீரன் பூலித்தேவன் பிறந்த வீரம் நிறைந்த மண் தென்காசிக்கு வருவதில் பெருமை கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே என்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் ரூ.182 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரூ.34 கோடியில் 23 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.22 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மீகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன். மாவீரன் பூலித்தேவன் பிறந்த வீரம் நிறைந்த மண் தென்காசிக்கு வருவதில் பெருமை கொள்கிறேன் என கூறினார்.
இயற்கை எழில் கொஞ்சக்கூடிய மாவட்டம் தென்காசி மாவட்டம். அதிக அளவில் அருவிகள், அணைகள் இருக்கும் மாவட்டம் தென்காசி என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். குற்றாலத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் சாரல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
தென்காசி விழாவில் ரூ.182.56 கோடியில் 1,03,508 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பூலித்தேவனுக்கு மணிமண்டபம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர் என முதல்வர் கூறினார். பசும்பொன் முத்துராமலிங்க கல்லூரியை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டது தான் திமுக அரசு எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்காசி மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். இனாத்தூர் பெரிய ஏரி சுற்றுலா தலமாக ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். புளியங்குடி - சங்கரன்கோவில் இணைப்பு சாலை மேம்படுத்தப்படும். தென்காசி மாவட்டத்துக்கு புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 11,490 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 80 லட்சம் முறை கட்டணமின்றி நகரப்பேருந்துகளில் பெண்கள் பயணித்துள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications