அடேங்கப்பா.. என்னா மாதிரி சூறாவளி.. சுற்றி சுழன்றடித்த காற்று.. பதறிப் போன ஏனாம்.. வீடியோவ பாருங்க!
புதுவை: ஆந்திரா- புதுவை எல்லையில் உள்ள ஏனாமில் கோதாவரி ஆற்றில் வானத்திலிருந்து பூமியை நோக்கி சூறாவளி காற்று சுழன்றடித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
புதுவை யூனியன் பிரதேசத்திற்குள்பட்டது ஏனாம் பகுதி. இதன் சில பகுதிகள் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று கோதாவரி ஆற்றில் வானத்திலிருந்து பூமியை நோக்கி சூறாவளிக் காற்று சுழன்றடித்தது.

சுழன்றடித்தது
சில நொடிகள் நீடித்த இந்த சுழன்றடித்த சூறாவளியால் அந்த பகுதியில் உள்ள குடிசைகள் சேதமடைந்தன. அது போல் ஆற்றின் அருகே இருந்த பகுதிகளும் சேதமடைந்தன. இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தற்போது லாக்டவுனால் அதிக அளவு வாகன போக்குவரத்து ஏதும் இல்லாததால் இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

நினைவுகள்
இதனால் ஏனாம் பகுதி மக்கள் ஏதாவது நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் ஏற்படாது என அரசு சார்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை மேற்கோள்காட்டி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் சில தகவல்களின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

சூறாவளி
அதன்படி ஏனாமில் ஏற்பட்ட சூறாவளி மிகவும் அரிதான நிகழ்வாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வடசென்னை பகுதியான எண்ணூரில் பூமியிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததை பார்த்தோம். அது போல் 2013-இல் செப்டம்பர் மாதம் தென் சென்னையான உச்சண்டியில் இது போன்ற சூறாவளி காற்று ஏற்பட்டதை பார்த்தோம் என்றார்.

அரிது அரிது
ஜூலை மாதத்தில் சூறாவளி என்பது அரிதிலும் அரிது என்கிறார்கள். அதிலும் இந்த சூறாவளி குளிர்ந்த மற்றும் அனல் கலந்து காற்றை அளித்தது. இது போல் பெங்களூரிலும் ஒரு முறை ஏற்பட்டதாக நெட்டிசன்கள் நினைவுகூர்கிறார்கள். டெல்லியில் 1978-ஆம் ஆண்டும், ஒடிஸாவில் 1978 ஆம் ஆண்டும், சூறாவளிகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications