கிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார்
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக, தேர்தல் ஆணையத்தில் அம்மாநில பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறது.

அக்கட்சி சார்பில் வைத்திலிங்கம் களமிறங்கியுள்ளார். இவரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை அவர் தெரிவித்தார்.
கிரண் பேடி ஆண் என்பதைப் போல அவரது கருத்து அமைந்திருந்தது. இது பாஜகவினரை மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் ரவிச்சந்திரன் சார்பில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் சம்பத் பிரச்சாரத்திற்கு புதுச்சேரியில் தடை விதிக்கப்படுமா அல்லது வேறு மாதிரியான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்குமா என்பது தொடர்பாக இனி தான் தெரியவரும்.
அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தற்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications