புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா, பீகார்.. அடுத்து புதுச்சேரி?பகீர் கிளப்பும் அரசியல் விமர்சகர்கள்..பாஜகவின் பிளான் என்ன?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கூட்டணி வைக்கும் கட்சிகளை பாஜக அழிக்கிறது என்று பீகார் ஜேடியூ தலைவர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ள நிலையில், பாஜக அடுத்த திட்டம் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர்.

Recommended Video

    பீகாரைத் தொடர்ந்து புதுச்சேரி: BJPக்கு அடுத்த செக்? Politics Today With Jailany

    2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின் பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் மூலம் ஆட்சியமைத்தாலும், சில மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குதிரைபேரம், எதிர்க்கட்சி எம்எல்ஏ -க்களை ராஜினாமா செய்ய வைத்து பாஜக ஆட்சியமைத்தது.

    அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சிட்டோம்.. 'துரோகி, எதிரி’ - 2 பேரை விளாசிய எடப்பாடி பழனிசாமி! அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சிட்டோம்.. 'துரோகி, எதிரி’ - 2 பேரை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

     பீகார் விவகாரம்

    பீகார் விவகாரம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை தனி அணியாக பிரித்து, பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் அந்த கணக்கு பீகாரில் தவறாகி உள்ளது. பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரிக்க பாஜக முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் திடீரென பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின்னர் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து நிதீஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

    அடுத்தது புதுச்சேரி?

    அடுத்தது புதுச்சேரி?

    இப்படி கூட்டணியில் உள்ள கட்சிகளையும் பிரித்தும், ஆளும் கட்சியில் உள்ள எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியமைத்து வந்தது. இதனால் பாஜகவின் அடுத்த குறி, புதுச்சேரி மாநிலமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழ்நாட்டுடன் இணைந்து புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்பட்டது. 30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், 10 இடங்களில் வென்ற ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் , சில சுயேச்சைகள் மற்றும் 6 இடங்களில் வென்ற பாஜக உடன் இணைந்து ஆட்சியை அமைத்தார்.

    என்ன பிரச்னை?

    என்ன பிரச்னை?

    இதனைத்தொடர்ந்து நியமன எம்எல்ஏ-க்கள் 3 பேர் என பாஜக பலம் 9ஆக உள்ளது. இதனிடையே புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ள தமிழிசை செளந்தரராஜன் - ரங்கசாமி இடையிலான கருத்து மோதல், ஆட்சியில் பாஜகவின் தலையீடு என அவ்வப்போது சில பிரச்னைகள் எழுகின்றன. இதனிடையே தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், புதுச்சேரியிலும் ரங்கசாமி கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

     நாராயணசாமி எச்சரிக்கை

    நாராயணசாமி எச்சரிக்கை

    பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் காலம் விரைவில் வரும். பாஜக எப்போதுமே கூட்டணிக் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையைத் தான் செய்கிறது. புதுச்சேரி மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இங்கும் அது விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    English summary
    With Bihar JD(U) chief Nitish Kumar accusing the BJP of destroying alliance parties, political commentators have different views on the BJP's next plan. Here Also Ex CM Narayanasamy Says BJP always does the work of undermining the alliance party. Puducherry is no exception. Here too it will start soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X