சத்தியமூர்த்தி எங்கே?.. "மிஸ்டர் க்ளீனுக்காக" ஆவேசமாக தமிழிசையிடம் கிளம்பி போகும் புதுச்சேரி பெண்கள்
சென்னை: புதுச்சேரியில் சத்தியமூர்த்தி தெரியுமா? இவருக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் புதுச்சேரியில் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்.. ஏன் தெரியுமா?
பாண்டிச்சேரி அரசில் ஊரக வளர்ச்சித்துறையின் செக்ரட்டரியாக இருப்பவர் சத்தியமூர்த்தி ஐ.எஃப்.எஸ்.. மக்களுக்கு சேவை செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவர். பாண்டிச்சேரி அரசில் செயல்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டத்தை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வந்தவரும்கூட..

தில்லுமுல்லு: அதேசமயம், அரசு தரப்பில் எதிர்பார்க்கும் சிலபல தில்லுமுல்லுகளுக்கு இடம் கொடுக்காமல் திட்டத்தின் பலன் முழுமையாக மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவரும்கூட. இந்த அனைத்து காரணங்களுக்காகவுமே, அரசின் கோபத்தை இவர் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
எனினும், 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பலனாளிகளை சேர்த்து மக்களுக்கான அதிகாரியாக மாறியிருந்தார் சத்தியமூர்த்தி.. ஆனால், இதனை பொறுக்காத பாண்டிச்சேரி அரசாங்கம், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சொல்லி பாண்டிச்சேரியிலிருந்து அந்தமானுக்கு சத்திய மூர்த்தியை சமீபத்தில் டிரான்ஸ்பர் செய்துவிட்டது. உடனே இதனையறிந்த பாண்டிச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், கொந்தளித்து போயிருக்கிறார்களாம்.
டிரான்ஸ்பர்: சத்தியமூர்த்தியை மாற்றிய உத்தரவை திரும்பபெற வேண்டும் என்று அவருக்கான போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள்.. இந்த சம்பவம் பாண்டிச்சேரி அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இது குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை கடிதம் கொடுக்கவும் 100 நாள் வேலைத்திட்டத்தின் பலனாளிகள் முயற்சித்து வருகின்றனர்.
இதற்கு ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், பொதுமக்கள் கொந்தளித்து கிடக்கிறார்கள்.. டிரான்ஸ்பர் என்று கேள்விப்பட்டதுமே, இதை ரத்து செய்ய வேண்டும் என்று 300க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள்.. ஒவ்வொருநாளும் பெண்கள், போராட்டத்தை முன்னெடுத்தும் வருகிறார்கள்..
பொறுப்பு: முன்பெல்லாம், இந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை பொறுத்தவரை, வருடத்துக்கு சில நாட்கள் மட்டுமே பெண்களுக்கு வேலை கிடைத்து வந்ததாம்.. ஆனால், சத்தியமூர்த்தி பொறுப்புக்கு வந்ததுமே, வருஷத்துக்கு 6 மாசம் வரை பெண்களுக்கு வேலை கிடைத்திருக்கிறதாம்.. இந்த நன்றிக்காகவே, அவரை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்று கொந்தளித்து சொல்கிறார்களாம் புதுச்சேரி பெண்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications