மாண்டஸ் புயலால் கடலில் பெரிய அளவில் மாற்றங்கள்.. தீவிர ஆய்வில் இறங்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள்.. ஷாக்
புதுச்சேரி: தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு சென்ற மாண்டஸ் புயலால் புதுச்சேரி கடலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன; இதனால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணிக்க நிபுணர் குழு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது.
தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழக நிபுணர் நடத்தி வரும் இந்த ஆய்வின் முடிவில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி கடலில் நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

அது என்ன கடல் மாற்றம்?
2004-ம் ஆண்டு தெற்காசியாவையே கதிகலங்கச் செய்த சுனாமியை யாரும் மறந்திருக்க முடியாது. சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி என தமிழகத்தையும் அந்த ஆழிப் பேரலை விட்டு வைக்கவில்லை. சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த சுனாமி கடலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திச் சென்றதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, கடலின் தோற்றத்தையே சுனாமிக்கு முன், சுனாமிக்கு பின் என வரையறுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, வங்கக்கடலின் ஒருபகுதியான மெரினா கடற்கரைக்கு பலரும் சென்றிருப்போம். சுனாமிக்கு முன்பு வரை மெரினா கடல் சற்று தொலைவிலும், கண் பார்வைக்கு கீழேயும் அமைந்திருக்கும். ஆனால், சுனாமிக்கு பிறகு மெரினா கடலின் தோற்றமே பயமுறுத்தும் வகையில் மாறிப்போனது. கடல் நீர் பல அடி முன்பு வந்திருக்கிறது. மேலும், கடல் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்திருப்பதை உற்று கவனித்தால் தெரியும்.

மூழ்கும் சென்னை..
மெரினா மட்டுமல்ல., இந்தியா உள்ளிட்ட தெற்காசிய கடல்கள் அனைத்துமே சுனாமிக்கு பின்னர் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. தமிழகக் கடல் பகுதிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதுமட்டுமல்லாமல், பருவநிலை மாறுபாடு காரணமாக கடல் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலை நீடிக்குமேயானால், அடுத்த 5 ஆண்டுகளில் சென்னையில் உள்ள 29 சதவீத பகுதிகள் கடல் நீரில் மூழ்கும் என சென்னை மாநகராட்சியே தனது ஆய்வறிக்கையில் அண்மையில் தெரிவித்திருந்தது.

மணல் பரப்புகளை விழுங்கிய கடல்
நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த 9-ம் தேதி வீசிய மாண்டஸ் புயல், தமிழகத்தில் உள்ள கடல்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கரையை கடந்த போதிலும், பிற மாவட்டங்களில் உள்ள கடல்களும் இந்த மாண்டஸ் புயலால் மாறுதல்களை சந்தித்திருக்கின்றன. இந்த புயலுக்கு பிறகு தமிழகத்தில் கடற்கரையோரம் உள்ள மணல் பரப்புகள் கடலுக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வட சென்னை பகுதியான எண்ணூரில் பல அடி தூரம் இருந்த மணல் பரப்புகள் கடலுக்குள் சென்றுவிட்டதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

புதுச்சேரியில் ஆய்வு
மாண்டஸ் புயலுக்கு பிறகு, புதுச்சேரியில் பல இடங்களில் கடற்கரை மணல் பரப்புகள் காணாமல் போயுள்ளன. புதுச்சேரி கடலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழக நிபுணர் குழுவினரர் குழுவினர் நவீன கருவிகளுடன் தற்போது முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். தலைமை செயலகம் முதல் வீராம்பட்டிணண் வரையில் 7 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை செயற்கைக்கோள் உதவியும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். புதுச்சேரி கடலில் நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications