போராட்டம் நடத்துவது தவறு... நேரில் வாங்க பேசலாம்... கிரண்பேடி அழைப்பு
புதுச்சேரி: முதல்வரின் தர்ணா போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதி உள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முதல்வர் நாராயணசாமி அரசுப் பணிகளை அங்கு இருந்தவாறே கவனித்து வருகிறார். தர்ணா போராட்டத்திற்கு சபாநாயகர் வைத்தியலிங்கம் நேரில் ஆதரவு தெரிவித்தார்.

மேலும், தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஆளுநருக்கு எதிராக உருவப் பொம்மை எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், போராட்டக்களத்திலேயே அரசு கோப்புகளை பார்த்து கையெழுத்திட்டு வருகிறார் முதல்வர். தங்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 7ஆம் தேதி என்னிடம் கடிதம் அளித்துள்ளீர்கள்.

இந்த கடிதம் குறித்து பரிசீலிப்பதற்கு போதிய அவகாசம் கூட கொடுக்காமல் தங்களது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகை வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். எனினும் உங்கள் கடிதம் குறித்து நேரிடையாக ஆலோசனை நடத்துவதற்கு வரும் 21ந்தேதி காலை 10 மணிக்கு வரும்படி முதலமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், முதல்வர் நாராயணசாமி சொல்வது போல எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை என்றும், 13 ம் தேதிக்குள் பதில் தராவிட்டால் தர்ணா நடத்துவோம் என்று நாராயணசாமி எதுவும் கூறவில்லை என கூறியுள்ள கிரண்பேடி, எனது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் போராட்டம் நடத்துவது தவறு என தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications