அங்கீகாரம் எங்கே? முறையான அனுமதி பெறாத 33 பள்ளிகளுக்கும் பறந்த திடீர் உத்தரவு.. புதுச்சேரி பரபரப்பு
புதுச்சேரி: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக லிஸ்ட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் என்னென்ன என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். அந்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

"புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.. அது சட்டத்துக்கு முரணானது என்று கருதப்படுகிறது.
கல்வித்துறை: முதல் கட்டமாக அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூடுமாறு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி பள்ளி கல்வித்துறையானது உத்தரவிட்டது. மேலும், அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
அதனை தொடர்ந்து, 2வது கட்டமாக கிருஷ்ணா நகர் ஸ்ரீகலா மழலையர் பள்ளி, சங்கரதாஸ் சுவாமிகள் நகர் அக்ஷயா மழலையர் பள்ளி, முத்தியால்பேட்டை சிஷூ பவன் பள்ளி, அவ்வல் மழலையர் பள்ளி, சாரம் லட்சுமி பள்ளி, நவசக்தி நகர் ஸ்ரீராம் குரு பள்ளி, வில்லியனூர் ஆருத்ரா முன்மழலையர் பள்ளி, மூகாம்பிகை நகர் லிட்டில் ஜீனியஸ் முன்மழலையர் பள்ளி, தவளக்குப்பம் அகல்வ்யா சர்வதேச பள்ளி, அரியாங்குப்பம் ஆங்கிலோ சர்வதேச பள்ளி உள்ளிட்ட மேலும் 33 அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு பள்ளி கல்வி துறையானது கடந்த 25ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள்: எனவே, அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், பள்ளி நிர்வாகமோ அல்லது பெற்றோர்களே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையின் போது, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
விதிமுறை மீறல்கள்: அவ்வாறு, அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது, புதுச்சேரி பள்ளி கல்வி சட்டம், 1987 மற்றும் புதுச்சேரி பள்ளி கல்வி விதிகள், 1996 ஆகியவற்றின் படி விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும்.
மேலும், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை சட்டம் (ஆர்டிஇ), 2009 பிரிவு 18(5)ன் படி, அங்கீகார சான்றிதழை பெறாமல் பள்ளியை தொடர்ந்து நடத்துபவர் அங்கீகாரத்தை திரும்ப பெற்ற பிறகு, ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்து விதி மீறல்கள் இருந்தால், அத்தகைய மீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications