எடப்பாடி விலக.. பாஜகவை நெருங்கி வரும் ஓபிஎஸ் டீம்.. கூட்டணி தொடர்கிறது.. புதுச்சேரியில் புது ரூட்!
புதுச்சேரி: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது என நேற்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக, பாஜக கூட்டணியில் தொடர்கிறது என புதுச்சேரி மாநில ஓபிஎஸ் அணி நிர்வாகி ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில ஓபிஎஸ் அணி நிர்வாகி ஓம் சக்தி சேகர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி மாநில பாஜக தலைவராக ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதியை நியமனம் செய்துள்ளனர். இந்த நியமனத்தை வரவேற்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கம் என்கின்ற வகையிலே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து சிறப்பாக செயல்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு உண்டான அனைத்து வழிகளிலும் அதிமுக உறுதுணையாக இருக்கும்.
கடந்த எட்டு ஆண்டு காலமாக சாமிநாதன் புதுச்சேரி மாநிலத்தின் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டு புதுச்சேரியில் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து கொடுத்தார். அதேபோன்று இப்போது வந்திருக்கின்ற செல்வகணபதி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் செயல்படுவார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் தனக்குத்தானே ஒரு பதவியை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் இப்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளியில் சென்று விட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை அதிமுக என்பது ஓபிஎஸ் தான். அதிமுக ஆட்சி புதுச்சேரியிலும் தமிழ்நாட்டிலும் அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து செயல்படும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக இடம்பெறும். தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும்" என்று ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முழு ஆதரவு கொடுத்து வந்ததால் தான் ஓபிஎஸ் நிலைமை பரிதாபகரம் ஆனது. ஆனால், இப்போது, எடப்பாடி தரப்பு, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளதால், டெல்லி காற்று தேனி பக்கம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் கொடுத்திருக்கிறது. அதன் விளைவாகவே, புதுச்சேரியில் ஓபிஎஸ் அணியின் ஓம் சக்தி சேகர், பாஜகவை நெருங்கி வருகிறாராம்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications