புதுவையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்.. தனித்து போட்டி என அறிவிப்பு
புதுவை: புதுச்சேரியில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை போல் புதுவையிலும் அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி புதுவைக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

30 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட புதுவையில் பாஜக, என் ஆர் காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகியவை நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் பாமக 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டது. இதற்கு ஒப்புக் கொள்ளாததை அடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியது.
இதை அக்கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் உறுதிப்படுத்தினார். மேலும் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. புதுவையில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலும் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிய நிலையில் புதுவையிலும் பாமக விலகியது குறிப்பிடத்தக்கது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications