நீ எழுந்திரும்மா.. என் சொந்தகாரங்க உட்காரனும் ".. அரசு பேருந்தில் பெண்ணிடம் போலீஸ் அடாவடி.. வீடியோ!
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஏஎஸ்ஐ ஒருவர் தனது உறவினர்க்கு இருக்கை வேண்டும் என்பதற்காக வலுகட்டாயமாக எழச் செய்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றைய முந்தினம் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக குளிர்சாதன பேருந்து ஒன்று சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தது, முன்பதிவு ஏதும் இல்லாததால் வரும் பயணிகள் இடம் பிடித்து அமர்ந்தனர்.
அப்போது அங்கு வந்த உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரியும் ஏஎஸ்ஐ முருகேசன், இருவர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை அங்கிருந்து எழுந்திருக்குமாறு கூறினார்.

முன்பதிவு
அதற்கு அந்த பெண் முன்பதிவு இல்லாத பேருந்தில் ஏன் எழ வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஏஎஸ்ஐ தாம் அந்த இருக்கையில் இடம் பிடித்து வைத்திருப்பதாக கூறினார். ஆனால் அந்த பெண்ணோ நீங்கள் சொல்வது போல் இந்த இருக்கையில் யாரும் இடம் பிடிக்கவில்லை என்றார்.

வாக்குவாதம்
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஒரு கட்டத்தில் ஏ.எஸ்.ஐ தனது பலத்தை காட்டும் விதமாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு ஜீப் உடன் வந்த காவலர்கள் அந்த பெண்ணை இருக்கையில் இருந்து எழச் செய்து ஜீப்பில் ஏற்றினர்.

செல்போன்
இதனை செல்போனில் படம் எடுத்த கொண்டிருந்த இளைஞரிடம் சென்று அவரின் செல்போஃனை பறித்த ஏ.எஸ்.ஐ முருகேசன் அந்த இளைஞர், பேருந்தில் இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்த பெண், அவரது கணவர் ஆகிய மூவரையும் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.

விவகாரம்
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் பாபுஜி அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, ஏ.எஸ்.ஐ ஒருவர் தனது சொந்த விவகாரத்திற்காக பொது மக்களிடம் காட்டமாக பேசி, குற்றவாளி போல் அவர்களை ஜீப்பில் ஏற்றி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்து.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications