புதுச்சேரி: வைத்திலிங்கம் உள்பட 18 பேர் போட்டி.. தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் களத்தில் 8 பேர்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்களவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி முடிவடைந்த நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுப்ரமணியன் உள்ளிட்ட 18 பேர் களத்தில் உள்ளனர்.

தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல்:
இதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரீசிலனை அன்று ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு, 10 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இதில் இன்று 2 வேட்பு மனு வாபஸ் பெறபட்டதால் இறுதி வேட்பாளர் பட்டியலின்படி 8 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். திமுக வேட்பாளர் வெங்கடேசன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நெடுஞ்செழியன், அமமுக வேட்பாளர் முருகசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌரி உள்பட 8 களத்தில் உள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications