தனக்கு எதிராக நாராயணசாமி நடத்தும் போராட்டம் வெல்க... ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தனக்கு எதிராக போராடும் முதல்வர் நாராயணசாமிக்கு கிரண்பேடி வாழ்த்து- வீடியோ

    புதுச்சேரி: தனக்கு எதிராக டெல்லியில் முதலமைச்சர் நாராயணசாமி நடத்த உள்ள போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. அப்போது அவர் கூறியதாவது:

    Puducherry Governor kiran bedi Congratulations To CM Narayanasamy

    வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே நியாயவிலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. அதன் அடிப்படையில் தான் பொங்கல் இலவச பொருட்கள் வழங்க முடியும். கோப்புகளை அனுப்பினால் மட்டுமே ஒப்புதல் வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், தன்னை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி வரும் 4 ஆம் தேதி டெல்லியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும், அவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வரட்டும் என்றும் கூறினார்.

    இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும், நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+