புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி.. ஆகஸ்ட் 15ல் தேசிய கொடியேற்றும்போது.. கொரோனா இறங்கும்.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ம் தேதி தேசியக்கொடி ஏற்றும் போது கொரோனா கீழே இறக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    புதுச்சேரி.. ஆகஸ்ட் 15ல் தேசிய கொடியேற்றும்போது.. கொரோனா இறங்கும்.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

    புதுச்சேரியில் தற்போது 8 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரியில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி துணை ஆளுநர் மாளிகை முன்பு துவக்கப்பட்டது.

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 17 ஆண்டுகளாக மறக்கமுடியாத துயரம் - கண்ணீர் அஞ்சலிகும்பகோணம் பள்ளி தீ விபத்து - 17 ஆண்டுகளாக மறக்கமுடியாத துயரம் - கண்ணீர் அஞ்சலி

    கொசு வேடமணிந்து விழிப்புணர்வு

    கொசு வேடமணிந்து விழிப்புணர்வு

    கொசுவால் டெங்கு பரவுகிறது என்பதை குறிக்கும் வகையில் கொசு வேடமணிந்த ஒருவர் பேரணியில் பங்கேற்றார். அப்போது அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

    தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

    தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவையில், குழந்தைகள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுபோல தான் தற்போதும் பாதிப்பு உள்ளது. புதிதாக அதிகரித்திருப்பதாக கருதவில்லை. குழந்தைகளுக்கான வார்டுகள், ஆக்சிஜன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். உயரிழப்பு போன்றவை இல்லாத வகையில் அனைத்து பாதுகாப்பு சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொரோனா கீழே இறக்கப்படும்

    கொரோனா கீழே இறக்கப்படும்

    கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது. ஒருவேளை குழந்தைகளை அதிகம் தாக்கப்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 15 தேசிய கொடி ஏற்றும் போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். கொரோனா தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் மாநிலத்தில் நேற்று, 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    The corona should have been lowered when the national flag was hoisted on August 15 in Puducherry, Lieutenant Governor of Puducherry Tamilisai Soundararajan told Tamil News.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X