சிங்கம் களம் இறங்கிருச்சு..புதுக்கோட்டையை புரட்டி போட்ட CVB! பதறிப் போன பர்வேஸ் &கோ..ஆனந்த் வர்றார்?

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: அதிமுகவில் பவர்ஃபுல் அமைச்சராக இருந்து, 2026ல் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவிலிருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். இணைவதற்கு முன்பு வரும் இடைத்தேர்தலில் தான் விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்றால் தனக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்கின்ற டிமான்டுடனையே தவெகாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இணைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது கட்சியில் பதவியையும் பெற்று விட்டார். "இனி தான் புதுக்கோட்டையில் கச்சேரியே இருக்கு!" என்கின்றனர் தவெகவினர்.

2026 அதிமுகவிலிருந்து தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த மூத்த நிர்வாகிகள் யாருக்குமே தவெக வில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது. இது தவெகவில் இணைந்த அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

C VijayaBaskar TVK Vijay

குறிப்பாக சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது கைவசம் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் தவெகவில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்று அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல் வெளியானது.

புதுக்கோட்டை தவெக

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து அரசியல் செய்ய தனக்கு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தவெக தலைமைக்கு விஜயபாஸ்கர் நெருக்கடி கொடுத்ததார். இதனையடுத்து அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே புதுக்கோட்டையில் மாவட்ட செயலாளரும், அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் முகமது பர்வேஸுக்கு ஏற்கனவே விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததில் அவருக்கு விருப்பமில்லை என என சொல்லப்படுகிறது.

சி விஜயபாஸ்கர்

காரணம், சி விஜயபாஸ்கர் போன்ற புதுக்கோட்டையில் செல்வாக்குமிக்க ஒரு நபர் தவெக வில் இணையும் பொழுது தன்னுடைய செல்வாக்கு கட்சியில் குறைந்துவிடும் என்கின்ற அச்சம் பார்வேஸுக்கு ஏற்கனவே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் வெளிப்படையாக மாப்பிள்ளை மாமா என்று ஒருவர் ஒருவர் ஆறத் தழுவிக் கொண்டாலும் கூட விஜயபாஸ்கர் புதுக்கோட்டை தவெக வில் எந்த வகையிலும் தலைதூக்கி விடக் கூடாது என்பதில் சாதுரியமாக காய்களை நகர்த்தி வந்தார் அமைச்சர் பர்வேஸ்.

அமைச்சர் பர்வேஸ்

அதே நேரத்தில் தனக்கு கொஞ்சம் இடம் கிடைத்தால், தான் யார்? என்பதை நிரூபித்து தக்க வைத்துக் கொள்ளக் கூடியவர் தான் விஜயபாஸ்கர் என்பது அமைச்சர் பர்வேஸூக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் தற்பொழுது மாப்பிள்ளை என்று சற்று விஜயபாஸ்கர் அடக்கி வாசித்த நிலையில், அவர் கையில் அமைச்சர் பதவியும் கட்சியின் பொறுப்பும் வந்து விட்டால் அவருடைய ஆட்டமே வேற வகையில் இருக்கும் என்கிறார்கள் புதுக்கோட்டையைச் சார்ந்த அரசியல் பிரமுகர்கள்.

விஜய்

இந்த நிலையில் தான் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்கு பொறுப்புகளை அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய். இதற்கிடையே மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு கொடுத்ததால் ஏற்கனவே பல வருடங்களாக இந்த கட்சிக்கு உழைத்தவர்கள் ஒதுக்கப்படுகிறோம் என்று கடும் அப்செட் ஆகியுள்ளனர் புதுக்கோட்டைவாசிகள்.

கட்சியில் பதவி

அதே நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த மூத்த தலைவர்களுக்கு இன்னும் பொறுப்பு வழங்காமல் தாமதித்தால் அடுத்து தவெகவுக்கு சென்றால் மரியாதை இருக்காது என மாற்றுக் கட்சியில் இருந்து யாரும் வர மாட்டார்கள் எனவே இப்போதைக்கு உடனடியாக பதவியை அறிவித்து விடுவோம் என்ற புஸ்ஸி ஆனந்தின் ஆலோசனையை ஏற்ற விஜய், விஜயபாஸ்கர் அண்ட் கோவிற்கு பதவி வழங்கியிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்

இந்த நிலையில் புதுக்கோட்டையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக அணி - விஜய் ரசிகர் மன்ற அணி என இரண்டு கோஷ்டிகள் உருவாகி இருப்பதாக சொல்கின்றனர். நேற்று பதவி கிடைத்த உற்சாகத்தில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, போஸ்டர் பிளக்ஸ் என ஒரே நாளில் பிரம்மாண்டம் காட்டி விட்டார்களாம். இதனால் பர்வேஸ் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது என்கின்றனர்.

புஸ்ஸி ஆனந்த்

இதற்கிடையே விஜயபாஸ்கரின் அட்ராசிட்டிகளை சிலர் தமிழக வெற்றிக் கழக தலைமையிடம் போட்டு கொடுத்த நிலையில் என்ன செய்வது என தமிழக வெற்றிக் கழக தலைமை யோசித்து வருகிறதாம். இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் விஜயபாஸ்கர் போன்ற வலுவான வேட்பாளர்கள் தேவை என்பதால் தான் அவருக்கு பதவி கொடுத்திருக்கும் நிலையில் அவருக்கு எதிராகவே மாவட்ட செயலாளர்கள் கிளம்பி இருப்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறதாம் தமிழக வெற்றி கழகம். எனினும் பஞ்சாயத்தை விரைவில் முடிக்க புஸ்ஸி ஆனந்த் களமிறங்குவார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+