Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சி பதவி.. ஆன்மிக வழியில் அரசியலில் நுழைகிறாரா பொன் மாணிக்கவேல்? அவரே சொன்ன அதிரடி பதில்.. ஆஹா

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ‛‛தமிழக சிலை பாதுகாப்பு மையங்களில் இருக்கும் சிலைகளில் பெரும்பாலானவை போலி சிலைகளாக உள்ளன'' என குற்றம்சுமர்த்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல், ‛‛ஆன்மிகம் வேறு.. அரசியல் வேறு.. கட்சி பதவி கொடுத்தால்'' எனக்கூறி அரசியல் பிரவேசம் தொடர்பாக அவர் பதில் அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பில் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் ஓய்வு பெற்ற காவல் துறை ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்

புதுக்கோட்டையில் முன்னாள் காவல்துறை ஐஜி பொன்மாணிக்கவேல் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு சரியில்லை என குற்றம்சாட்டினார்.

பொன் மாணிக்கவேல் பேட்டி

பொன் மாணிக்கவேல் பேட்டி

மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் பாதுகாப்பு மையங்களில் உள்ள பெரும்பாலான சிலைகள் போலியானவையாக உள்ளன என அவர் குற்றம்சாட்டினார். அதோடு தமிழகத்தில் உள்ள பழமையான நான்கு ஆதீனங்களை யாராவது தொந்தரவு செய்தால் அவர்களை காப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்வேன் என எச்சரிக்கை செய்தார். இதுபற்றி பொன் மாணிக்கவேல் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

பழி சுமர்த்த வேண்டாம்

பழி சுமர்த்த வேண்டாம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மீது எந்த விதமான பழியையும் சுமத்த வேண்டாம். அவர்கள் நன்றாக தான் பணியாற்றி வருகிறார்கள். நடராஜர் சிலையை ஏலத்தில் விடச் சென்றவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இது பாரட்டத்தக்கது. இதோடு இந்த பணிகள் முடிவது கிடையாது. அதனை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பணியாற்றினாலும் உயர் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை உயர் அதிகாரிகள் தாமாகவே முன்வந்து சிலை கடத்தல் தொடர்பாக விசாரணை செய்து சிலைகளை மீட்க வேண்டும்.

சாக்கடையிடம் முறையிட...

சாக்கடையிடம் முறையிட...

தமிழகத்தில் பழமையான ஆதீனங்கள் 5 உள்ளன. இவைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் நாங்கள் முன் வந்து நிற்போம். அதற்கு எந்த எல்லைக்கு கூட நாங்கள் செல்ல தயாராக உள்ளோம். ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக சேர்க்கக்கூடாது. ஆன்மிகம் புனிதமானது. அரசியல் ஒரு சாக்கடை. ஆனால் நாங்கள் அந்த சாக்கடையிடம் தான் சென்று முறையிட வேண்டும்.

அர்ச்சகர்கள் இல்லாத நிலை

அர்ச்சகர்கள் இல்லாத நிலை

என்னுடைய நோக்கம் என்பது 2500 சிலைகளை அந்தந்த கோவில்களுக்கு சேர்ப்பது தான். 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளில் பழமையை கணக்கீடு செய்து அதனை ஆவணப்படுத்தி ரிஜிஸ்டர் செய்யும் பணியை தான் நான் தொடங்கியுள்ளேன். தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோவில்களில் வரும் 10 முதல் 20 ஆண்டுகளில் அர்ச்சகர்களே இல்லாத நிலை ஏற்படும். கோவில்கள் மற்றும் சிலைகளை பாதுகாப்பது என்பது அதிகாரிகளிடமும் அரசிடம் மட்டுமே ஒப்படைக்காமல் இது போன்ற சிவனடியாளர்களும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதனால்தான் சிவனடியார்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

அரசியல் பிரவேசமா?

அரசியல் பிரவேசமா?

இதில் எந்த ஒரு உள்நோக்கம் கிடையாது. எனக்கு எந்த அரசியல் கட்சியாவது பதவி கொடுத்தால் அதை தூக்கி குப்பையில் தான் போடுவேன். அறநிலையத்துறை அதிகாரிகள் வேலையை பார்க்க வேண்டும். கோவில்களை சொந்த சொத்துக்களாக எடுத்துக் கொள்கின்றனர். வீரசோழபுரத்தில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவில் இடியும் தருவாயில் உள்ளது. அந்த கோவிலை திருப்பணி செய்வதற்கு அரசு நிதியை ஒதுக்கவில்லை. ஆனால் அந்த கோவிலின் சொத்து 35 ஏக்கரை அரசாங்கம் எடுத்துள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்.

பெரும்பலானவை போலி சிலைகள்

பெரும்பலானவை போலி சிலைகள்

அறநிலையத் துறை சார்பாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிலை பாதுகாப்பு மையங்களில் சிலைகள் பெரும்பாலானவை உண்மையானது அல்ல. இதற்கு ஒரு உதாரணம் திருவாரூர் மாவட்டத்தில் நாங்கள் 813 சிலைகளை ஆய்வு செய்ததில் 197க்கு மேற்பட்டவை போலியானவை என்பது கண்டறியப்பட்டது. 813 சிலைகளிலேயே 197 சிலைகள் போலியானவை என்றால் ஒவ்வொரு ஊரிலும் சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள சிலைகளில் எவ்வளவு போலியானவை இருக்கும்

நடவடிக்கை இல்லையே

நடவடிக்கை இல்லையே

இது குறித்தான அறிக்கையை நான் அதிகாரியாக இருக்கும்போது காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் அரசிடமும் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அறநிலையத்துறை மாநில தொல்லியல் துறை ஆகியவை ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இதனை விசாரிக்காமல் உள்ளனர். அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே சிலைகளை காப்பாற்ற முடியும்'' என்றார்.

நாமே புகாரளிப்பது இல்லை

நாமே புகாரளிப்பது இல்லை

அதன்பிறகு கூட்டத்தில் பேசிய பொன்மாணிக்கவேல் ‛‛ஆதீனங்கள் அரசியல்வாதிகளை சென்று பார்க்க கூடாது அரசியல்வாதிகள் வேண்டுமானால் ஆன்மீகவாதிகளை சென்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள் அதிக அளவில் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து ஆதீனங்கள் அல்லது பொதுமக்கள் யாராவது புகார் கொடுத்து உள்ளீர்களா?. அரசியல்வாதிகளை பார்த்து நாம் கேள்வி கேட்கிறோம் நாமே புகார்கள் அளிப்பது கிடையாது. ஆதீனங்களில் உள்ள கோவில்களில் உள்ள 17 முதல் 18 தங்க விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளது அது குறித்தும் எந்த புகார் எந்த ஆதீனமும் வழங்கவில்லை'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+