மறுபடியும் வர முடியுமா.. வந்துர முடியுமா.. தினகரனிடம் அமைச்சரை கடுமையாக விமர்சித்த பெண்!
அமைச்சரை சரமாரியாக பெண் ஒருவர் திட்டிய வீடியோ வைரலாகிறது.
Recommended Video

புதுக்கோட்டை: புதுக்கோட்டைக்கு வந்த அமமுக தலைவர் டிடிவி தினகரனிடம், அமைச்சர் ஒருவரை கடுமையாக விமர்சித்து திமுக மகளிர் அணி நிர்வாகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சருக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும். எப்போதெல்லாம் தினகரன் அந்த மாவட்டத்துக்கு போவாரோ அப்போதெல்லாம் விஜயபாஸ்கரை கடுமையாகவே விமர்சித்து விட்டுதான் வருவார்.
அதேபோல "உங்க மாவட்ட அமைச்சர் குட் டாக்டர் இல்லை, குட்கா டாக்டர்" என்று சொன்னார். ஆனால் தினகரனின் இந்த பேச்சுக்கு இதுவரை அமைச்சர் உள்பட அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும், விளக்கமும், கண்டனமும் சொல்லவில்லை.

திட்டி தீர்க்கிறார்
இந்த நிலையில் டிடிவி தினகரன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட புதுக்கோட்டைக்கு சென்றிருக்கிறார். இப்போதும் விஜயபாஸ்கருக்கு சரமாரி திட்டு விழுகிறது. ஆனால் டிடிவியிடமிருந்து இல்லை. ஒரு பெண் டிடிவியிடம் அமைச்சரை திட்டி தீர்க்கிறார்.

வழி மறித்த பெண்
டிடிவி காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவரை ஒரு பெண் மறிக்கிறார். கார் நிற்கிறது. அந்த பெண் திமுக மகளிர் அணி நிர்வாகி கமலா என்று கூறப்படுகிறது. இவருக்கும், அமைச்சருக்கும் ஏதோ பிரச்சினை போல. அதை கொஞ்சமும் சம்பந்தமில்லாத டிடிவியிடம் சொல்லி திட்ட ஆரம்பிக்கிறார் அந்த பெண்.

சாவுதுங்க...
முற்றிலும் ஒருமையில்தான் பேசுகிறார் அப்பெண். அதை அமைதியாக வாகனத்தில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன். உங்க அம்மாதானே வளர்த்து விட்டுச்சு.. உங்க அம்மாதானே எங்க தலைவரை திட்டினதுக்காக பதவி குடுத்துச்சு... போங்க... மக்களை பாருங்க.. சாவுதுங்க மக்கள்" என ஆவேசமாக ஒத்தை விரலை நீட்டி கொதித்து போய் பேசுகிறார் அந்த பெண்.

வரவே முடியாது
தினகரன் அந்த பெண்ணின் பேச்சுக்கு இடையில், "வரவே முடியாது.. அரசியல்லேயே இருக்க முடியாது" என்று பதில் சொல்லிவிட்டு நகர்கிறார். இப்படி மாவட்ட அமைச்சரையே பெண் ஒருவர் வாய் நிறைய திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications