லிங்கமலையில் கிறிஸ்தவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது? விஜய் அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் விவகாரத்தைத் தொடர்ந்து இப்போது புதுக்கோட்டை லிங்கமலை விவகாரமும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிங்கமலையில் சிலுவை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில் இந்து முன்னணி தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், முதலமைச்சர் விஜயையும் நேரடியாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மலம்பட்டி கிராமத்தில் லிங்கமலை அமைந்துள்ளது. இங்கு பழமையான சிவன் கோயில், கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல தலைமுறைகளாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

Nainar Nagendran pudukkottai TVK Tamil Nadu Politics

லிங்கமலையில் சிலுவை

இந்நிலையில், லிங்கமலை உச்சியில் சிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் இந்து முன்னணி சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது.. மேலும், மலையின் பெயரை சவேரியார் மலை என மாற்ற முயற்சி நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்தது. அத்துடன் இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி புகார் மனுவும் அளித்துள்ளது.

மலையின் தொன்மையையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்தது, பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக இப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே தவெக அரசு மீது பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் அவர், லிங்கமலை விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தைத் தொடர்ந்து லிங்கமலையும் குறிவைக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சிலுவை அருகே ஜெபம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும், இதைத் தட்டிக்கேட்ட இந்து பக்தர் மாரிமுத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா?

எப்படி துணிச்சல் வந்தது?

புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டிக்கு அருகில் 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ள லிங்கமலைப் பகுதியில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிலுவை அருகே, கோட்டாட்சியரின் தடை உத்தரவையும் மீறி, நவம்பர் 24 ஆம் தேதி "மகா கார்த்திகை" தீபத் திருநாளன்று ஜெபம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதைத் தட்டிக் கேட்ட இந்து பக்தர் மாரிமுத்து கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் கடும் கண்டனத்திற்குரியவை!

அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை உட்பட சோழர்கால வரலாற்று சான்றுகள் நிறைந்திருக்கும் லிங்கமலைப் பகுதியில், கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்த இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது?

திருப்பரங்குன்றத் தீபத் தூண்

திருப்பரங்குன்றத் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதைத் திட்டமிட்டு தடுத்துக் கொண்டிருக்கும்
@TVKPartyHQ ஆட்சியில், இந்துக்களின் உரிமைகள் மீது கை வைத்தால் யார் என்ன கேட்கப் போகிறார்கள் என்ற துணிச்சலா? அல்லது சபாநாயகர் முதல் முதல்வர், முக்கிய அமைச்சர்கள் வரை அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கும் தவெகவின் சிறுபான்மையின அரசு, இந்துக்களுக்கு ஆதரவாக எப்படியும் குரல் கொடுக்காது என்ற இளக்காரமா?

இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஆளும் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், சமூகத்தில் சகோதரத்துவம் எப்படி மலரும்? சமத்துவம் எப்படி தழைத்தோங்கும்?

எனவே, 'இது அனைவருக்குமான ஆட்சி' என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது, அதை தனது செயலிலும் திரு.@TVKVijayHQ அவர்கள் செய்து காட்ட வேண்டும். திரு. மாரிமுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இந்துக்களின் உரிமைகளையும் தவெக அரசு பாதுகாக்க வேண்டும்!" என காட்டமாக நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

தவெக அரசுக்கு மீண்டும் தலைவலி?

ஏற்கனவே தவெக அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சட்டப்பேரவை நடவடிக்கைகள், கோயில் விவகாரங்கள் என பல்வேறு விஷயங்களில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, லிங்கமலை விவகாரமும் தற்போது அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழலில், மதம் சார்ந்த விவகாரங்கள் தவெக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடரும் நயினாரின் விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நேற்றுகூட ரூ.1,614 கோடி கொரிய நிறுவனங்களின் முதலீடு ஆந்திராவுக்குச் சென்ற விவகாரத்தை முன்வைத்து விஜய் அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

"ரீல்ஸ் பாலிடிக்ஸும்... ரியாலிட்டி செக்கும்! - ரூ.1614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக விஜய் அரசு!" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றது.

இந்த நிலையில், இப்போது லிங்கமலை விவகாரத்தையும் கையில் எடுத்துள்ள நயினார் நாகேந்திரன், தவெக அரசுக்கு எதிராக மீண்டும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அடுத்தடுத்து எழும் இந்த விவகாரங்கள் விஜய் அரசுக்கு அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+