ஷாக்.. சீறி வந்த காளை..சிக்கிய நபர் படுகாயம்! ஜல்லிக்கட்டில் 3வது பலி! புதுக்கோட்டை அருகே சோகம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் கணேசன் என்ற நபர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மூன்று ஜல்லிக்கட்டுகளில் மூன்று பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் புதுக்கோட்டையின் சில பகுதிகள் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி அவனியாபுரத்திலும் நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று அலங்காநால்லூரில் போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் திருச்சி சூரியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும் பாலமேட்டில் அதிக காளைகளைப் பிடித்த ஜல்லிக்கட்டு வீரர் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிர்ச்சி சம்பவம்
நேற்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருந்த அரவிந்த் ராஜ் வாடிவாசலில் அடுத்த காளைக்காக காத்திருந்தபோது மாடு முட்டியதில் வயிற்றில் பலத்த காயம் அடைந்தார். இதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

இருவர் பலி
இதே போல நேற்று திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக வந்த அரவிந்த் என்ற இளைஞர் ஜல்லிக்கட்டு காளை ஆக்ரோஷமாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்தார். இரு வேறு இடங்களில் நடந்தாலும் ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டில் ஒரே பெயரைக் கொண்ட இரு இளைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பலி
இந்த நிலையில் இன்றும் ஜல்லிக்கட்டில் ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரம் பகுதியில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் கணேசன் என்ற 58 வயது நபர் தான் தற்போது உயிரிழந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சுவிரட்டு போட்டியில் இதுவரை மொத்தமாக 25 பேர் காயமடைந்த நிலையில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 9 பேர் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர் 9, காளை உரிமையாளர் 13 , பார்வையாளர் 4 என மொத்தம் 26 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications