திமுக வெற்றியை அதிமுகவுக்கு தாரைவார்ப்பு... புதுக்கோட்டையில் போஸ்டர் சர்ச்சை
புதுக்கோட்டை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக பெற்ற வெற்றியை மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி அதிமுகவுக்கு தாரைவார்த்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திருமயம் ஒன்றிய கழகத்தொண்டர்கள் என்ற பெயரில் ரகுபதியை விமர்சித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தலைமை வரை பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது.
மேலும், திருமயம் ஒன்றிய திமுக செயலாளர் அழகு சிதம்பரம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அந்த போஸ்டரில் புகார் கூறப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவை விட கூடுதல் இடங்களை திமுக கைப்பற்றியும், மறைமுகத் தேர்தலின் போது பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு காரணம் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தான் என புகார் கூறுகின்றனர் ஒரு தரப்பினர்.

விமர்சனம்
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் ரகுபதி என்பதால் அவருக்கு இன்னும் தனது பழைய கட்சி மீதான பாசம் போகவில்லை என்றும், இதன் காரணமாகவே அதிமுகவுக்கு சாதகமான முறையில் அவர் செயல்படுகிறார் எனவும் விமர்சிக்கின்றனர் திருமயம் ஒன்றியத்தை சேர்ந்த சில நிர்வாகிகள்.

தாரைவார்ப்பு
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் திமுகவின் வெற்றியை அதிமுகவுக்கு தாரைவார்த்துவிட்டதாக ரகுபதி எம்.எல்.ஏ.மீது புகார் கூறி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், மாவட்ட கவுன்சிலர்கள் 3 பேரை அதிமுகவுக்கு தாரைவார்த்துவிட்டார் ரகுபதி என கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சீட் எதிர்பார்த்து கிடைக்காத காரணத்தால் ஒரு சிலர் இதுபோன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், இந்த போஸ்டருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் தங்களுக்கு தெரியும் எனவும் கூறுகின்றனர் ரகுபதி தரப்பினர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications