மனுசங்களாயா நீங்க.. குடிநீரில் மலம் கலந்த மனித மிருகங்கள்! தீவிரமடையும் விசாரணை.. அடுத்தடுத்து கைது!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை: இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, இழிவு செய்து பேசிய சிங்கம்மாள் என்ற பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது SC/ST தடுப்புச் சட்டத்தில் வழக்கு செய்யப்பட்ட நிலையில், டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் அனைத்து மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு வந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள் தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது

குடிநீரில் மலம்
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சோதனை செய்தபோது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையம் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆலய நுழைவு
மேலும் அந்த பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் அய்யனார் கோவிலுக்கு எங்களை அனுமதிக்கவில்லை என்றும் டீ கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக பட்டியல் அனைத்து மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார்.

சாமியாடி பெண்
அப்போது அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பெண் ஒருவர் திடீரென்று சாமியாடி, பட்டியலின மக்களைப் பார்த்து கோவிலுக்குள் ஏன் வந்தாய் என்று கேட்டதால் மாவட்ட ஆட்சியரும், உயர் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சாமி ஆடிய பெண் மீதும், இரு குவளை முறையை பயன்படுத்திய டீக்கடை உரிமையாளர் மீதும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு பிறப்பித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண் வருகின்றனர்.

அதிரடி கைது
இந்நிலையில் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, இழிவு செய்து பேசிய சிங்கம்மாள் என்ற பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது SC/ST தடுப்புச் சட்டத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிங்கம்மாள், மூக்கையா இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில், பரபரப்பு நிலவுகிறது.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications