தொடர் கனமழை.. புதுக்கோட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. வெளியான அறிவிப்பு
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் இன்று பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அனைத்து பாடங்களுக்கும் பொது நுழைவு தேர்வு.. மத்திய அரசு புதிய திட்டம்.. கல்வித்துறை அமைச்சர் தகவல்

இன்று கனமழை
தமிழகத்தில் இன்று நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனம முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி மேற்கூறிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டையில் நாளை விடுமுறை
அதன்படி நேற்று இரவில் இருந்தே சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. இதேபோல் திருவண்ணாமலை உள்பட பிற மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்தது. இதற்கு புதுக்கோட்டை மாவட்டமும் விதிவிலக்கல்ல. மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதியான நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

நாளை மழை எங்கே?
இதுமட்டுமின்றி தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய உள்ளது.

தென்காசி-புதுக்கோட்டையில் மழை
மேலும் நாளை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.