அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டை: அதிமுக உள்ளவரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜ தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இஸ்லாமிய இளைஞர் பேரவை மற்றும் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இஸ்லாமியர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வந்தாலும் உள்ளூரின் பெருமையை நிலை நாட்டுபவர்கள் என்றார். மேலும், அதிமுக உள்ளவரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மக்களுக்காக கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் திமுக தடுக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், அதிமுகவுக்கு குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதால், அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications