புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரிந்த சாதி வெறி! எத்தனை தலைமுறை ஏக்கம்! இறையூர் கோவிலில் பட்டியலின மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரமும் அதைத்தொடர்ந்து இரட்டைக் குவளை முறை தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவ்வூரைச் சேர்ந்த மூன்று சமுதாய மக்களும் கோவிலில் ஒன்றாக பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

இனி நாங்கல்லாம் ஒன்னு! புதுக்கோட்டை விவகாரத்தில் உடன்பாடு! பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி! இனி நாங்கல்லாம் ஒன்னு! புதுக்கோட்டை விவகாரத்தில் உடன்பாடு! பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி!

 குடிநீரில் மலம்

குடிநீரில் மலம்

மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டியையும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்

சமரச பேச்சுவார்த்தை

சமரச பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நேற்று இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

கோவிலில் வழிபாடு

கோவிலில் வழிபாடு

மேலும் அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வழிபடுவதற்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. இரட்டை குவளை முறை குறித்து உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்

சிறப்பு பூஜைகள்

சிறப்பு பூஜைகள்

பட்டியல் இனத்து மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இறையூர் அய்யனார் கோயிலில் அந்த ஊரில் இருக்கும் மூன்று சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு வாழை மர தோரணங்கள் கட்டி விழாக்கோலம் பூண்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க அப்பகுதி பட்டியலின மக்களை வருவாய்த்துறை நறும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளும் பூஜை பொருட்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

மக்கள் நன்றி

மக்கள் நன்றி

தொடர்ந்து அவர்களை அங்கிருந்த பிற சமுதாய மக்கள் வரவேற்று கோவிலில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் முத்துக்காடு இறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினர். பல தலைமுறைகளாக கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தலைமுறை மக்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ள நிலையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் குடிநீரில் மனிதக்கழிவுகளை கலந்த கொடூர நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

English summary
the issue of faeces in the drinking water and subsequent arrests were made in connection with the double mug system, now three community members from Avvur have performed Pongal together in the temple In Pudukottai district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X