ராமநாதபுரத்தில் திமுக நேரடியாக போட்டி? முஸ்லீம் லீக் நிலை? பரபரக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம்
ராமநாதபுரம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக நேரடியாக களம் இறங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக்கிற்கு வேறு 1 தொகுதி தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என ஒரு தகவல் உலா வந்தாலும் கூட, அதனை பாஜக தரப்பில் இன்னும் உறுதி செய்யவில்லை.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே நடந்த சண்டை ஊரறிந்த ஒன்றாகும். அரசு விழாவில் எல்லோர் முன்னிலையிலும் தொலைச்சுபுடுவேன் என தன்னை பார்த்து நவாஸ் கனி ஆட்காட்டி விரலை காட்டி பேசியதை அமைச்சர் ராஜகண்ணப்பனால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
இதனால் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக் சார்பில், நவாஸ் கனிக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என்பதில் ராஜகண்ணப்பன் உறுதியாக உள்ளார். இதனிடைடே திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி ராமநாதபுரம் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனோடும் சரி, திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்தோடும் சரி இணக்கமாக இருந்து வருகிறார் ராஜீவ்காந்தி. அதுமட்டுமல்ல அமைச்சர் அன்பில் மகேஷின் ஆசியும் இவருக்கும் உண்டு. இதனால் ராமநாதபுரத்தில் திமுக போட்டியிட்டால் ராஜீவ்காந்தி தான் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
இதனிடையே ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் திமுக கூட்டணியில் கேட்டுப்பெற முஸ்லீம் லீக் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதனால் இப்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகிவிட்டது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications