முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை! அழைப்பு விடுக்கும் தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள்! எடப்பாடி முடிவு?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலமைச்சராக இருந்த போது பசும்பொன் கிராமத்துக்கே சென்று மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, கடந்தாண்டு சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனிடையே இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமியை பசும்பொன் வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள் தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

முத்துராமலிங்கத் தேவர்
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முக்குலத்தோர் அமைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் அமைப்பினர் சிலர் போஸ்டர்கள் ஒட்டி தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்திருந்ததுடன், அன்று சசிகலா, நேற்று டிடிவி தினகரன், இன்று ஓபிஎஸ் என்றெல்லாம் வாசகங்கள் அச்சடித்து கவனம் ஈர்த்திருந்தனர். இதனிடையே முத்துராமலிங்கத் தேவர் தங்ககவசத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொடுக்கும் விவகாரத்திலும் ஓபிஎஸ் -எடப்பாடி இடையே மோதல் நீடித்து வருகிறது.

தென் மாவட நிர்வாகிகள்
இப்படி ஒரு சூழலில் எடப்பாடி பழனிசாமி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வருகை தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே அவரை வருகை தருமாறு ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய தென் மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

திமுக தரப்பில்
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் விழாவில் திமுக தரப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை பணிச்சுமை காரணமாக அவரால் செல்லமுடியவில்லை என்றால், உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் இதில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications