ராமநாதபுரம் தொகுதி என்றால் சும்மாவா? இதுவரை யாரெல்லாம் ஜெயித்தார்கள் தெரியுமா?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை எந்தெந்த கட்சியெல்லாம் பெற்றி பெற்றிருக்கிறது என்பது குறித்து தொகுதி விவரம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, திருவாடானை, பரமக்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இந்தத் தொகுதிக்குள் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயில், ஏர்வாடி தர்ஹா, பாம்பன் பாலம், தனுஷ்கோடி, என பல ஆன்மிகத் தலங்களும், சுற்றுலா இடங்களும் உள்ளடக்கி உள்ளன.

1980 கள் வரை காங்கிரசும் அதன் பிறகு திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முறையே மாறி மாறி வெற்றி பெற்று வருவதும் கவனிக்கத்தக்கது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து விடாபிடியாக சண்டை போட்டு ராமநாதபுரம் தொகுதியை வாங்கிய பாஜக, நயினார் நாகேந்திரனை வேட்பாளராக களமிறக்கியது. ஆனால் அவரோ திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ் கனியிடம் சுமார் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், அகதிகள் முகாம், என சென்சிடிவ் விவகாரங்கள் உள்ள ஒரு தொகுதி ராமநாதபுரம். கடந்த 1991 நாடாளுமன்றத் தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக ராமநாதபுரம் திகழ்ந்தது. இடையே 1971ஆம் ஆண்டு மட்டும் பார்வார்டு பிளாக் சார்பில் மூக்கையா தேவரும், 1980ல் திமுக வேட்பாளர் சத்யேந்திரனும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்கள்.

1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயப்பன் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி வெற்றிபெற்றார். அடுத்த ஓராண்டில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவே வெற்றிபெற்றது, அதிமுக வேட்பாளர் மலைச்சாமி ராமநாதபுரத்தில் வெற்றி பெற்றார்.
அடுத்ததாக 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பவானி ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவே ராமநாதபுரத்தில் வெற்றிபெற்றது. மு.க.அழகிரி சிபாரிசில் சீட் வாங்கி போட்டியிட்ட ஜே.கே.ரித்தீஷ் எம்.பி.யானார். அவரைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா எம்.பி.யாக வெற்றி பெற்றார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றார்.
மொத்தத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மூக்கையா தேவர், கடலாடி சத்தியமூர்த்தி, மலைச்சாமி, ஜேகே ரித்தீஷ், அன்வர் ராஜா, போன்றோர் ராமநாதபுரம் தொகுதியின் இதுவரை எம்.பி.யாக இருந்தவர்களில் பரிச்சயம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications