"பாஜகவுக்கு ஆதரவாக சொல்லல" திமுக அராஜகம் அதிகரிப்பு.. மூக்கணாங் கயிறாக ஆளுநர்.. டிடிவி தினகரன்!
ராமநாதபுரம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மூக்கணாங் கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லை என்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்துவிடும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் திமுக, அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பசும்பொன் வந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.
மதம், இனத்தால் நாடு பிரியக்கூடாது.. பிரிவினையை முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்.. சேகர்பாபு உறுதி

குடும்ப ஆட்சி
இதன்பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதேநிலை நீடித்தால் திமுக ஆட்சி விரைவில் மக்களால் வீட்டிற்கு அனுப்பப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆட்சி நடத்தி வருகிறார்.

அதிமுக ஒற்றுமை எப்போது?
தொடர்ந்து, அதிமுக ஒற்றுமை எப்போது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னொரு கட்சி பற்றி பேசக்கூடாது. இருந்தாலும், இதற்கு முன் ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்து செயல்பட்டபோது யாரால் ஒற்றுமை ஏற்பட்டதோ, மீண்டும் அவர்கள் நினைத்தால் மட்டுமே இருவரும் சேர்வார்கள் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் ஆட்சி
தொடர்ந்து ஆளுநர் பேச்சு பற்றிய கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லையென்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்திருக்கும். ஆளுநர் தான் இப்போது மூக்கணாங் கயிறு போல் இருக்கிறார். பாஜகவிற்கு ஆதரவாக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து முன்னதாக நான் எச்சரித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மூக்கணாங் கயிறாக ஆளுநர்
தொடர்ந்து ஆளுநர் பேச்சு பற்றி கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லையென்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்திருக்கும். ஆளுநர் தான் இப்போது மூக்கணாங் கயிறு போல் இருக்கிறார். பாஜகவிற்கு ஆதரவாக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து முன்னதாக நான் எச்சரித்துள்ளேன் என்று தெரிவித்தார்.