அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
ராமநாதபுரம்: அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 104.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் முகமது முத்து மீரான் மரைக்காயர் (104). இவர் ஏவுகணை மனிதர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் ஆவார். இவர் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார்.

இவருக்கு உடல்நல பாதிப்புகள் இருந்த போதிலும் தன்னுடைய பணிகளை அவரே கவனித்து வந்தார். இந்த நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அப்துல் கலாமை போல் இவரும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இறந்த முகமது முத்து மீரானின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்தான் தனது 104 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கொரோனா பரவலால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
முத்து மீரானின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என இரங்கல் குறிப்பை பதிவு செய்துள்ளார். அது போல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன்.
கலாம் அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications