அதெல்லாம் கிடையாது.. கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம்.. இல.கணேசன் திட்டவட்டம்

பாஜக கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பரமக்குடியில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பேசியபோது சொன்னதாவது:

L. Ganesan talks about BJP Alliance

கூட்டணி குறித்து முறையான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம்.

அது யாரோடு என்பது உரிய காலத்தில் முடிவாகும். நாடு தழுவிய அளவுக்கு பாஜக தலைவர் அமித்ஷா, வெவ்வேறு மாநிலத்துக்குச் சென்று அந்தந்த மாநிலத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு பேசி வருகிறார்.

மாநில வாரியாக பேச்சுவார்த்தை இப்போதுதான் முடிவாகி வருகிறது. தமிழ்நாட்டுக்கும் விரைவில் முடிவாகும். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது மட்டும் உரிய நேரத்தில் அமித்ஷா அறிவிப்பார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+