Jananayagan: குழந்தைகளுடன் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர் ராஜீவ்! வெடித்தது சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் ராமநாதபுரத்தில் ஒரு தியேட்டரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், குழந்தைகளுடன் சென்று படம் பார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் தணிக்கை வாரியம் 12 இடங்களில் கத்தரி போட்டது. இரு அநாகரீக வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டன. இது போல் நிறைய சர்ச்சைக்குரிய சீன்கள் வெட்டப்பட்டன.

jananayagan

எனினும் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வாங்க தயாரிப்பு நிறுவனம் முயற்சித்தும் அது முடியாமல் போனது. கடைசியில் ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழை தணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திரைப்படத்திற்கு 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

இதுகுறித்து தியேட்டர்களில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. மீறி அழைத்து வரும் பெற்றோரை தியேட்டர் நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்து வருகிறார்கள். இதனால் குழந்தை ரசிகர்கள் கொண்ட விஜய்யின் திரைப்படத்தை காண முடியாத நிலை உள்ளது.

பெற்றோரும் குழந்தைகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு எப்படி செல்வது என்ற யோசனையால் படம் பார்க்க தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது என்றால் அதை பார்க்கும் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமும் வன்முறை தவறில்லை என்ற நிலைப்பாடும் ஏற்பட்டுவிடும். அவரது மனம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால்தான் கூலி, ஜனநாயகன் உள்ளிட்ட படங்களுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை முதல்வர் விஜய், அவரது தாய், தந்தை, அரசு அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் இரவு பார்த்துவிட்டார். அது போல் நேற்று தியேட்டர்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் பார்த்தனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை ரோட்டில் உள்ள தியேட்டருக்கு அமைச்சர் ராஜீவ் தனது குழந்தை, உறவினர் குழந்தையுடன் ஜனநாயகன் படம் பார்க்க வந்தார்.

ஏ சான்றிதழ் பெற்ற படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது என்ற விதி இருக்கும் போது அதை அமைச்சரே மீறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த மற்றவர்களும் குழந்தைகளுடன் கிளம்பி வந்து தியேட்டரில் சண்டையிட்டால் என்ன செய்வது? மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் அமைச்சரே இப்படி விதிகளை மீறுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+