Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் ரகசிய கேமரா.. சிக்கியவர்களின் செல்போனில் ஏராளமான வீடியோக்கள்.. பார்வேர்டு செய்தார்களா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் உள்ள தனியார் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களின் செல்போன்களில் 120 வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் ஆடிப்போயிருக்கிறார்கள். இந்த வீடியோக்களை வேறு யாருக்காது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுப்பினார்களா என்பதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் என்பது இந்துக்களின் புனித நகரமாகும். இங்கு அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிவிட்டு , ராமர் வந்து சென்றதாக நம்பப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று, அங்குள்ள தீர்த்தக்கிணறுகளிலும் நீராடியபின், சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வட இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வார்கள்.

rameswaram ramanathapuram temple

அப்படித்தான் ராமேஸ்வரம் கோவிலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஆன்மீக சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பெண் பக்தர்கள் சிலர் அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள். பின்னர் ராமேஸ்வரம் கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக கட்டணம் கொடுத்துள்ளனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த டீ மாஸ்டர், வயதான பெண்களை ஒரு அறைக்கும், இளம்பெண்களை மற்றொரு அறைக்கும் செல்லுமாறு கூறினாராம். இதில் சந்தேகம் அடைந்த ஒரு இளம்பெண், துணி மாற்றுவதற்காக சென்று பார்த்துள்ளார். பின்னர் அறை சுவரை முழுவதுமாக கவனித்திருக்கிறார். அப்போது அந்த அறையின் டைல்ஸ் கற்களுக்கு நடுவே ரகசியமாக கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். பின்னர் கையால் அந்த கேமராவை கைப்பற்றிய அந்த பெண், அவரது தந்தையிடம் கொடுத்தார்.

இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து ராமேஸ்வரம் டிஎஸ்பி சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார் கேமராவை கைப்பற்றியதுடன் உடை மாற்றுவதற்காக வரும் பெண்களை அந்தரங்கமாக படம் பிடிப்பதற்காக கேமரா வைத்திருந்ததாக டீக்கடை நடத்தி வரும் ராமேசுவரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (வயது 34), அந்த கடையில் வேலை பார்க்கும் டீ மாஸ்டர் ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த மீரான்மைதீன் (34) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். பின்னர் கோவில் காவல்நிலைய போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

rameswaram ramanathapuram temple

கைதான ராஜேஷ்கண்ணா மற்றும் மீரான்மைதீன் ஆகிய 2 பேரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன்களில் பெண்கள் உடை மாற்றுவது தொடர்பான 120-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த வீடியோக்களை உடை மாற்றும் அறையில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை அறிந்து போலீசார் ஆடிப்போனார்கள். இந்த வீடியோக்களை வேறு நபர்களுக்கு பரிமாற்றம் செய்து உள்ளார்களா? என்பதை அறிய போலீஸ் காவலில் எடுத்து கூடுதல் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் ஒட்டுமொத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித்சிங் காலோன் வெளியிட்ட அறிக்கையில். ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பக்தர்கள் உடைமாற்றும் அறையில் வைக்கப்பட்டு இருந்த கேமரா கைப்பற்றப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பெண் பக்தர்களை படம் பிடிக்க கேமரா வைத்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த அறைக்கு வழங்கிய உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

அதுபோல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் உள்பிரகார பகுதியில் உள்ள உடை மாற்றும் அறை, அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள உடைமாற்றும் இடங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ராமேசுவரம் பகுதியில் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் விடுதிகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டு காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காவல் துறை மூலம் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+