கூட்டுறவு வங்கி தங்க நகைக்கடன் நிறுத்தம்? நகையுடன் வந்து ஏமாறும் ராமநாதபுரம் மக்கள்? உடைந்த ரகசியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நகைக் கடன் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.. இதுகுறித்து அதிகாரிகள் சொல்வதென்ன?
நகைக் கடன் என்பது கிராமப்புறம் முதல் நகரம் வரை பல குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக இருக்கும் ஒரு முக்கிய நிதி ஆதாரம்.. விவசாயம் சார்ந்த செலவுகள், விதை, உரம், கூலி, மருத்துவ அவசரங்கள், கல்வி செலவுகள் போன்ற பல தேவைகளுக்கு நகைக் கடன் பெரிய துணையாக இருக்கிறது..

கூட்டுறவு வங்கி நகைக்கடன்
குறிப்பாக கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் நகைக் கடன்கள் குறைந்த வட்டி, எளிய நடைமுறை, விவசாயிகளுக்கு ஏற்ற நிபந்தனைகள் என மக்களிடையே நல்ல நம்பிக்கையை பெற்றுள்ளன.. தனியார் வங்கிகளை போல அதிக வட்டி சுமை இல்லாமல், தேசிய வங்கிகளைப் போல கடுமையான ஆவண சிக்கலும் இல்லாமல், நகையை அடிப்படையாக வைத்து விரைவில் பணம் கிடைப்பதே இதன் முக்கிய பலனாக உள்ளது..
இத்தகைய சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக் கடன் வழங்கல் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது..
ராமநாதபுரம் நகைக் கடன்
இதுவரை விவசாயிகளுக்காக விவசாய கடன், நகைக் கடன், கால்நடை வளர்ப்புக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன.. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வழியாக குறைந்த வட்டியில் நகைக் கடனும் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த நகைக் கடன் வழங்கல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது..
மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் நகைக் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இங்கு மட்டும் நிறுத்தப்பட்டிருப்பது விவசாயிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது..
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாய கடன், நகைக் கடன், கால்நடை வளர்ப்புக்கான கடன் எனப் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. மற்ற மாவட்டங்களில் தடையின்றி நகைக் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நகையுடன் ஏமாந்து திரும்பிய மக்கள்
கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைக்காததால், வேறு வழியின்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிக வட்டிக்குத் தனியார் வங்கிகளையும், அடகு கடைகளையும் நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இதனால் நகைக் கடன் பெற தனியார் மற்றும் தேசிய வங்கிகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.. அதிக வட்டி, கூடுதல் கட்டணங்கள் ஆகியவை அவர்களின் பொருளாதார சுமையை மேலும் அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள்..
விவசாயிகள் - நகைக்கடன் இலக்கு
இதுகுறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் தந்துள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நகைக் கடனுக்கான இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம், கடந்த ஆண்டுகளில் அந்த இலக்கு எட்டப்படாததால் தொடர்ச்சியாக நகைக் கடன்கள் வழங்கப்பட்டது..
ஆனால் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்த இலக்கு கடந்த மாதமே எட்டப்பட்டுவிட்டது.. அதனால் இனி ஏப்ரல் மாதத்திற்கு பிறகே நகைக் கடன் வழங்க இயலும் " தெரிவித்துள்ளார்..
அதிகாரியின் இந்த விளக்கத்தால், ஏப்ரல் மாதம் வரை அவசரத் தேவைகளுக்காக எங்கு செல்வது என்று தெரியாமல் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர். அவசர தேவைகளுக்கு உதவ வேண்டிய நகைக் கடன், இப்போது மக்களை அவசரத்தில் தள்ளி நிறுத்தியுள்ளதாகவே தெரிகிறது..!!
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications